Categories: சினிமா

பாஜக தலைவர் “கர்நாடக சிங்கம்” அண்ணாமலை நடித்துள்ள அரபி படத்தின் டீசர் வெளியானது

வெளியிட்டது

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நீச்சல் பயிற்சியாளராக நடித்துள்ள “அரபி” என்ற படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் ஐ.பி.எஸ் ஆக வேலை பார்த்தவர் அண்ணாமலை. கரூரில் பிறந்து வளர்ந்த இவர் கோவையில் கல்லூரி படிப்பை நிறைவு செய்தார். பின்னர் ஐ.பி.எஸ் தேர்வில் வென்று கர்நாடகாவில் போலீசாக வேலை பார்த்தார். பின்னர் 2019ம் ஆண்டு பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆர்.எஸ். எஸ் கொள்கையால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் இணைந்தார். இவர் தற்போது ஒரு கன்னட படத்தில் நடித்து முடித்துள்ளார். எப்போதும் சர்ச்சைக்குரிய பேச்சுகள், கலவரத்தை தூண்டிவிட முயற்சி செய்கிறார் போன்ற குற்றச்சாட்டுகள் இவர் மீது எப்போதும் வைக்கப்படுவது. டீசர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாஜக தலைவர் “கர்நாடக சிங்கம்” அண்ணாமலை நடித்துள்ள அரபி படத்தின் டீசர் வெளியானது 1

 

இரண்டு கைகளை இழந்த போதும் தன்னம்பிக்கையுடன் நீச்சல் போட்டியில் பல சாதனைகளை புரிந்தவர் விஸ்வாஸ். இவர் பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றுள்ளார். இவரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கன்னட படம்தான் அரபி. இதில் விஸ்வாஸ்க்கு நீச்சல் பயிற்சியாளராக நடித்துள்ளார் அண்ணாமலை. இந்த படத்தில் நடிக்க இயக்குனர் அண்ணாமலையை அணுகிய போது கதை மிகவும் பிடித்துப் போகவே ஒரு ரூபாய் சம்பளத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் அண்ணாமலை. அண்ணாமலை வரும் காட்சிகள் முழுவதும் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே டீசர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு தொழில்நுட்ப கோளாறுகளால் டீசர் வெளியாவது தள்ளிப் போய் இருந்தது தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தங்கள் தலைவர் நடித்துள்ள படத்தைப் பார்ப்பதற்காக பாஜகவினர் மிகுந்த ஆர்வத்தில் இருந்தனர். ஒரு ரூபாய் சம்பளத்தில் நடித்துள்ளதையும் அவர்கள் பாராட்டி வருகின்றனர். அந்த டீசரை நீங்களும் காண..Watch the teaser below..

Video Courtesy: a2 music

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்