
நயன்தாரா நடித்த “கோலமாவு கோகிலா” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார். இந்த படத்திற்கு முன் இவர் நடிகர் சிவகார்த்திகேயன் முதன் முதலில் விஜய் டிவியில் பங்கெடுத்த “கலக்கப்போவது யாரு” போன்ற விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளுக்கு இயக்குனராக பணியாற்றியுள்ளார். இப்பொது மிக பெரிய வெற்றியை பெற்றுள்ள “பிக் பாஸ்” போன்ற நிகழ்ச்சி உருவாக முக்கிய காரணமாகவும் இருந்தவர்.
சினிமா ஆசை கொண்ட இவரை அனிருத் நயன்தாராவிடம் பரிந்துரை செய்ய உருவான படம் தான் “கோலமாவு கோகிலா”. ஒரு Dark Comedy படமாக உருவாகிய இது மிக பெரிய வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து இவர் தனுக்கு நீண்ட நாள் பரிட்சயமான சிவகார்த்திகேயனுடன் “டாக்டர்” படத்தில் இணைந்தார். எப்போதும் எல்லா படங்களிலும் அதிகமாக பேசிக்கொண்டிருக்கும் நடிகர் சிவாவை அமைதியாக நடிக்க வைத்து ரசிகர்களுக்கு மாறுபட்ட ஒரு அனுபவத்தை கொடுத்து, மிக பெரிய வெற்றியை இந்த படத்திலும் பதிவு செய்தார்.
டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் கூட்டணி அமைத்த நெல்சன், அவரை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கினார். இந்த படம் மிக பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகிக்கொண்டிருந்த போதே, மீண்டும் சன் பிக்சர்ஸ் உடன் சுஐப்ர்ஸ்டார் ரஜினிகாந்துடன் படம் நெல்சன் இயக்க போவதாக செய்திகள் அதிகாரப்பூர்வாமாக வெளியானது. இந்த செய்தி, பீஸ்ட் படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பை மிகவும் எகிற செய்தது. பீஸ்ட் படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்தாலும், விமர்சன ரீதியாக கடும் தோல்வியை சந்தித்தது. பீஸ்ட் படத்தை ரசிகர்கள் இணையத்தில் சகட்டு மேனிக்கு கிண்டல் அடித்தனர். மோசமான திரைக்கதையே இப்படத்தின் தோல்விக்கு காரணம் என கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
இதனால் நெல்சனுக்கு தலைவர் 169 படத்தை இயக்கம் வாய்ப்பு பறிபோயுள்ளது எனவும், ரஜினி படத்தை ட்ராப் செய்துவிட்டார் எனவும் பல்வேறான செய்திகள் வெளிவந்து கொண்டே இருந்தன. பீஸ்ட் படத்தின் தோல்விக்கு திரைக்கதை தான் காரணம் என்பதால், திரைக்கதை அமைக்க நடிகர் ரஜினிகாந்த் தனது ஆஸ்தான இயக்குனரான கே.எஸ்.ரவிக்குமாரை அணுகியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஆகஸ்ட் இறுதியில் தலைவர் 169 படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிடியில் நடைபெறவுள்ளது.
ஆனால் இந்த செய்திகளுக்கெல்லாம் முற்று புள்ளி வைத்து நேற்று சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாக படத்தின் தலைப்பையும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழித்தியுள்ளது. இதையடுத்து, தலைவர் 169 படத்துக்கு ஜெயிலர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், ரத்தக் கறையுடன் கூடிய கத்தி தொங்குவது போல் இடம்பெற்றுள்ள போஸ்டருடன் அதன் தலைப்பும் வெளியிடப்பட்டு உள்ளது. இதன்மூலம் இப்படம் முழுக்க முழுக்க சிறையில் படமாக்கப்பட்டுள்ளது.
இந்த போஸ்டர் தான் இப்பொது ரஜினி ரசிகர்கள் மிகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. நெல்சன் முந்தைய படத்தில் தான் செய்த தவறுகள் அனைத்தையும் சரி சோதித்து மீண்டும் ஒரு மிக பெரிய வெற்றியை கொடுக்க ஆயுத்தம் ஆகிவருவதாக அவருடைய நலம் விரும்பிகள் கூறிவருகிறார்கள். இந்நிலையில், திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், ஜெயிலர் படத்தின் போஸ்டர் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டு “வன்முறையான முகங்கள், ரத்தம், சிகரெட், போதைப் பொருட்கள், துப்பாக்கி மற்றும் ரத்தம் சொட்டும் கத்தி போன்றவற்றைக் காட்டுவதன் மூலம் இந்த நடிகர்கள் 2k பூமர்களை தவறாக வழி நடத்துகிறார்கள் என பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் வழக்கம் போல விமர்சித்து வருகின்றனர்.