Categories: சினிமா

பார்த்திபனை மீண்டும் வம்பிழுக்கும் ப்ளூ சட்டை மாறன்.! பார்த்திபன் பற்றி ப்ளூ சட்டை போட்ட பதிவு

வெளியிட்டது

இயக்குனர் பார்த்திபனை அமேசான் பிரைம் நிறுவனம் நேற்று அசிங்கப்படுத்தி இருந்த நிலையில், அதை மேற்கோள் காட்டி ப்ளூ சட்டை மாறன் தற்போது ட்வீட் ஒன்றை போட்டு இருக்கிறார். தமிழில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் பார்த்திபன். இவர் பல படங்களை இயக்கியும் இருக்கிறார். இவர் இயக்கிய ஒத்த செருப்பு படம் தேசிய விருது பெற்றது. அதற்கு அடுத்தபடியாக இவர் இயக்கிய இரவின் நிழல் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட முதல் நான் லீனியர் படம் என்று கூறி வந்தார் பார்த்திபன். ஆனால் இந்த படம் ஒரே முதல் நான் லீனியர் படம் இல்லை, இதற்கு முன்பே அதுபோல் படம் எடுக்கப்பட்டுள்ளது என்று பலரும் மேற்கோள் காட்டி வந்தனர். குறிப்பாக 2013ஆம் ஆண்டு வெளியான பிஷ் அண்ட் கேட் என்கிற படம் தான் முதல் நான் லீனியர் மூவி என்று ப்ளூ சட்டை மாறன் கூறி வந்தார்.

பார்த்திபனை மீண்டும் வம்பிழுக்கும் ப்ளூ சட்டை மாறன்.! பார்த்திபன் பற்றி ப்ளூ சட்டை போட்ட பதிவு 1

இதனால் தொடர்ந்து ப்ளூ சட்டை மாறனுக்கும் பார்த்திபனுக்கும் வார்த்தை போர்கள் ஏற்பட்டது. தனது விமர்சனங்களில் பார்த்திபனை அவார்ட் பைத்தியம் என்று நேரடியாக தாக்குதல் தடுக்க தொடங்கினார் ப்ளூ சட்டை மாறன். இதனால் பார்த்திபனும் பதிலடி கொடுக்கத் தொடங்கினார். படங்களை பாசிட்டிவ் விமர்சனங்கள் செய்வதற்கு ப்ளூ சட்டை மாறன் மூன்று லட்ச ரூபாய் கேட்கிறார் என்கிற ஆடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் இன்று இந்த படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. அந்தப் படத்தின் குறிப்பில் இது முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் இல்லை, இந்த படத்தின் இயக்குனர் அவ்வாறு பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக குறிப்பிட்டிருந்தது.

 

இதைப் பார்த்த பார்த்திபன் அதிர்ந்து போனார். ஒரு வீடியோ வெளியிட்டு அப்படி குறிப்பிட்டிருப்பது தனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. இது முதல் நான் லீனியர் சிங்கிள் ஷார்ட் படம் தான். கூகுளில் வேண்டுமானாலும் சென்று தேடிப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் ப்ளூ சட்டை மாறன் அமேசான் பிரைம் சொன்னதை மேற்கோள் காட்டி வாய் வெல்லாது, வாய்மை தான் வெல்லும் என்று மீண்டும் பார்த்திபனை அசிங்கப்படுத்தி ஒரு பதிவு ஒன்றை போட்டிருக்கிறார். இதன் மூலம் பார்த்திபன் தன் படத்தை முதல் நான் லீனியர் சிங்கிள் சார்ட் படம் என்று பொய் சொன்னாரோ என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

Youtube Video Code Embed Credits: ABP Live

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்