காலங்கள் எவ்வளவு மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பது போல தற்போதும் கோவில்களில் தீண்டாமை கொடுமை நடந்து வருவது வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக மிகப்பெரிய நடிகராக இருக்கும் யோகி பாபுவிற்கு கோவிலில் நடந்த தீண்டாமை குறித்து தற்போது பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், ப்ளூ சட்டை மாறனும் தனது கண்டனங்களை தெரிவித்து இருக்கிறார். தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் யோகி பாபு. விஜய் தொலைக்காட்சியில் உதவி இயக்குனராக வாழ்க்கை ஆரம்பித்து பின்னர் மிகப் பெரிய நடிகராக உயர்ந்திருக்கிறார். தனது அயராத உழைப்பால் அவர் இந்த இடத்தை எட்டிப் பிடித்திருக்கிறார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஜெயிலர் படத்திலும் நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் அவரது வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி இருந்தது. சிறுவாபுரியில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்ற அவருக்கு தீண்டாமை கொடுமை நடந்து இருக்கிறது. கோவிலுக்குச் சென்ற யோகி பாபு அங்கு ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் அர்ச்சகர் ஒருவரிடம் சென்று கை கொடுக்கச் சென்றபோது அவரிடம் கை கொடுக்காமல் அர்ச்சகர் கையை விலக்கிக் கொண்டார். அந்த வீடியோ இணையத்தில் வெளியாகிய வைரல் ஆனது. பலரும் அர்ச்சகரின் அந்த செயலுக்கு கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இந்த காலத்திலும் இதுபோல் இருப்பார்களா என்று பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், தற்போது திரைவிமர்சகராக இருக்கும் ப்ளூ சட்டை மாறனும் அந்த வீடியோவை பகிர்ந்து பெரியாரின் வார்த்தைகளுடன் விமர்சித்திருக்கிறார். மறைமுகமாக யோகி பாபுவிற்கு அறிவுரையையும் வழங்கி இருக்கிறார் ப்ளூ சட்டை.
சாமி கும்பிடுகிறேன் என்பதற்கு எதிரானது இல்லை பகுத்தறிவு, “கும்புடுறேன் சாமி” என்பதற்கு எதிரானது தான் பகுத்தறிவு என்று பெரியாரின் வரிகளுடன் தற்போது அவர் அந்த வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். இதன் மூலம் மறைமுகமாக கோவிலில் இருக்கும் சாமியை கும்பிடுங்கள், அங்கு இருக்கும் சாமியார்களை அல்ல என்று யோகி பாபுவிற்கு மறைமுகமாக அட்வைஸ் செய்திருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Twitter Original Source from: Blue sattai Maran