Categories: சினிமா

“தலீவரை சங்கீனு சொன்னா கோவம் வருதா? அப்ப இதுக்கு பதில் சொல்லுங்க” – ஐஸ்வர்யாவிடம் கேள்வி கேட்ட ப்ளூ சட்டை

வெளியிட்டது

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘லால் சலாம்’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில், தற்போது இந்த படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் சில விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். இந்த படத்தின் கதாநாயகியாக இருக்கும் தன்யா பாலகிருஷ்ணன் சில ஆண்டுகளுக்கு முன்பு, “பெங்களூருவில் வசிக்கும் எங்களிடம் தண்ணீருக்காக தமிழர்கள் பிச்சை எடுக்கிறார்கள்” என்று ஒரு ட்வீட் ஒன்றை பகிர்ந்து இருந்தார். இது பெரும் சர்ச்சையான நிலையில் இனி தமிழ் படங்களில் நடிக்க மாட்டேன் என்று அவர் சபதம் எடுத்திருந்தார். தற்போது ‘லால் சலாம்’ படத்தில் அவர் கதாநாயகியாக நடித்ரு இருக்கும் நிலையில், ப்ளூ சட்டை மாறன் ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் சில கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.

"தலீவரை சங்கீனு சொன்னா கோவம் வருதா? அப்ப இதுக்கு பதில் சொல்லுங்க" - ஐஸ்வர்யாவிடம் கேள்வி கேட்ட ப்ளூ சட்டை 1
ட்விட்டரில் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், லால் சலாம் – நடிகர்களின் பின்னணி: பெயர்: தான்யா பாலகிருஷ்ணன். பெங்களூரில் வசிப்பவர். ‘ஏழாம் அறிவு’, ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘நீதானே என் பொன்வசந்தம்’, ‘ராஜா ராணி’ போன்ற சில தமிழ்ப்படங்களில் நடித்தார். ‘வாயை மூடி பேசவும்’, ‘மாரி’ போன்ற படங்களை இயக்கிய பாலாஜி மோகனை திருமணம் செய்து கொண்டார். சில வருடங்களுக்கு முன்பு CSK vs RCB அணிகளுக்கு இடையே நடந்த IPL போட்டி பற்றி இவர் போட்ட ட்வீட் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. அது இதுதான்: Dear Chennai, you beg for water we give! You beg for electricity, we give! ur people come and occupy our beautiful city and kocha paduthify it, we allow and nw u wr at our mercy to go to playoffs, we let be!! Like this you begging we giving!”

 

(தண்ணீருக்காக எங்களிடம் பிச்சை எடுக்கிறீர்கள். எங்கள் பெங்களூரை ஆக்ரமித்து, அந்த ஊரை கொச்சைப்படுத்துகிறீர்கள். எங்களிடம் பிச்சை கேட்பதால்.தருகிறோம்.) இவருக்கு எதிராக HateDhanya எனும் ஹாஷ்டாக் ட்ரெண்டிங் ஆனதால்… கடுப்பான இவர் ‘இனி தமிழ்ப்படங்களில் நடிக்கவே மாட்டேன்’ என சபதம் போட்டார். (I am withdrawing from the film I have accepted and won’t come back, she said), சரி இப்போது இதை சொல்ல வேண்டிய அவசியமென்ன என்று கேட்கிறீர்களா?

லால் சலாம் படத்தின் கதாநாயகியே இவர்தான். எத்தனையோ நடிகைகள் இருக்கும்போது.. தமிழர்களை பிச்சை எடுப்பவர்கள் என்று கூறிய இவரை ஹீரோயினாக நடிக்க வைத்துள்ளார் ஐஸ்வர்யா. இதற்கு ரஜினியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தலீவரை சங்கி இல்லையென்று கூறிய ஐஸ்வர்யா… இதற்கு என்ன பதில் கூறுவார்? சினிமா ரசிகர்களே… உங்கள் வேலை… இந்த படத்தை சூப்பர் ஹிட் ஆக்குவது மட்டுமே. மற்றபடி வேறு எந்த கேள்வியும் கேட்காதீர்கள். எஞ்சாய்.” என்று பதிவிட்டுள்ளார்.

Twitter Original Source From: Blue Sattai Maran

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்