என்ன சொல்லிட்டு இவரு உருவக்கேலி பண்ணுவாராம்.. சிம்புவை வம்பிழுக்கும் ப்ளூ சட்டை

வெளியிட்டது

வெந்து தணிந்தது காடு படத்தை பற்றி ப்ளூ சட்டை மாறன் கூறிய விமர்சனங்களுக்கு, சிம்பு நேற்று நடந்த மீட்டிங்கில் பதிலடி கொடுத்திருந்தார். இதனால் மீண்டும் சிம்புவை வம்பிழுக்கும் விதமாக ட்விட்டரில் பிரச்சனையை தொடங்கி இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன். ப்ளூ சட்டை மாறன் ஒரு திரைப்பட விமர்சகர் ஆவார். அவர் பல வருடங்களாக திரைப்படங்களை பார்த்துவிட்டு அதில் இருக்கும் நிறை குறைகளை விமர்சனமாக கூறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். எவ்வளவு பெரிய இயக்குனராக இருந்தாலும் நடிகராக இருந்தாலும் அவர்களது படங்களை கடுமையாக விமர்சிப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார் ப்ளூ சட்டை மாறன். சமீப காலமாக இவர் படங்களில் இருக்கும் நிறைகளை கூறாமல், குறைகளை மட்டும் கூறுவதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது. மேலும் படத்தை விமர்சிப்பதோடு தனிப்பட்ட முறையிலும் நடிகர்கள், நடிகைகள் உருவத்தை கேலி செய்தும் இவர் பேசுவதால் இவர் பேச்சுக்கு கடுமையான எதிர் வினைகளும் வருவது உண்டு.

என்ன சொல்லிட்டு இவரு உருவக்கேலி பண்ணுவாராம்.. சிம்புவை வம்பிழுக்கும் ப்ளூ சட்டை 1

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தை அவர் கடுமையாக விமர்சித்திருந்தார். கௌதம் வாசுதேவ் மேனனை வாய்ஸ் ஓவர் பைத்தியம் என்றும், வீணா போனவன் டான் ஆன கதை என்று சிம்புவை மறைமுகமாக தாக்கியும் இருந்தார். மேலும் அந்த படத்தில் வரும் துணை நடிகர் ஒருவரின் உருவத்தை கேலி செய்தும் ப்ளூ சட்டை பேசியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக சிம்பு நேற்றைய மீட்டிங்கில் உருவ கேலி செய்யாதீர்கள், என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள், நான் தாங்கிக் கொள்வேன். ஆனால் அது போல் எல்லோரும் தாங்கிக் கொள்ள மாட்டார்கள், படத்தை எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சனம் செய்யுங்கள் என்று பேசி இருந்தார். இது ப்ளூ சட்டை மாறனை தான் மறைமுகமாக விமர்சித்து பேசியிருக்கிறார் என்று ரசிகர்கள் கூறி வந்தனர். இந்த நிலையில் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் சிம்புவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சில கருத்துக்களை பதிவிட்டு இருக்கிறார்.

அவர் சிம்புவின் பழைய படங்களிலிருந்து சில பாடல்களின் வரிகளை மேற்கோள் காட்டி, அதற்கான அர்த்தங்கள் என்ன என்று கேட்டுள்ளார்? பெண்கள் கற்பு குறித்து சிம்பு படத்தில் வரும் பாடல்களை மேற்கோள் காட்டி அவர் இந்த கேள்விகளை எழுப்பி இருக்கிறார். மேலும் இந்த அர்த்தங்களை விளக்கிக் கூறும் மாறும் சிம்புவிடம் ப்ளூ சட்டை மாறன் வேண்டுகோள் வைத்துள்ளார். இதனால் தொடர்ந்து ப்ளூ சட்டை மாறனுக்கும் சிம்பு ரசிகர்களுக்கும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. சிம்புவின் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனின் ட்விட்டர் பக்கத்தில் சென்று அவரை திட்டியும் வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

View Comments

  • உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்றுதான் சிம்பு சொன்னார். இவர் ஏதோ சிம்புப் படப் பாடல்களில் மட்டும்தான் ஆபாசம் இருப்பது போல் பட்டியலிடுகிறார். எல்லா படங்களிலும் இம்மாதிரியான பாடல்கள் இடம் பெற்றுக் கொண்டுதான் உள்ளது. மாறன் இப்படி சுட்டி காட்டுவதனால் மட்டுமே அந்த வரிகள் கவனத்திற்கு வருகிறது. இல்லையென்றால் இப்பொழுது வரும் இசை இரைச்சலில் யாரும் வரிகளை கவனிப்பதில்லை

வெளியிட்டது

புதிய செய்திகள்