பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ள திரைப்படம் தான் “பொன்னியின் செல்வன்”. கல்கி எழுதிய வரலாற்றுப் புதினங்களில் மிக முக்கியமானதும், விறுவிறுப்பானதாகவும் உள்ள நாவல் தான் பொன்னியின் செல்வன். சோழர்களின் வரலாற்றை பல கற்பனை கதைகளுடன் இணைத்து மிக நேர்த்தியாக எழுதியிருப்பார் கல்கி. இந்த புதினத்தை பலர் படமாக்க எண்ணினர். ஆனால் யாராலும் இதை படமாக்க முடியவில்லை. எம்.ஜி.ஆர் கூட இந்த முயற்சியில் ஈடுபட்டு பின்னர் கைவிட்டார். இதை தற்போது எடுத்து செய்து வருபவர் மணிரத்னம். பல முண்ணனி நடிகர்களை முக்கியமான காதாபாத்திரத்தில் நடிக்க வைத்து மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார். இந்த படம் செப்டம்பர் 30ம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று படம் குறித்த அப்டேட் ஒன்றை வெளியிட்டு இருந்தது படக்குழு. இதை பார்த்த ப்ளூ சட்டை மாறன், காவி கொடியுடன் பொன்னியின் செல்வன் செப்டம்பர் 30ம் தேதி வருகிறது என பதிவிட்டு இருந்தார். இதனால் நெட்டிசன்கள் செம்ம கடுப்பில் இருக்கின்றனர். சமீபத்தில் வெளியான அனைத்துப் படங்களையும் விமர்சனம் என்ற பெயரில் மோசமாக விமர்சித்து வருகிறார் ப்ளூ சட்டை. சமீபத்தில் வெளியான விக்ரம் படம் தொடங்கி யானை படம் வரை அருத பழசு கதை, குப்பைக் கதை என விமர்சித்து இருந்தார். இவரின் விமர்சனங்களை பார்த்துவிட்டு ரசிகர்கள் இவரை திட்டாத நாளே இல்லை என்று சொல்லலாம். தற்போது மணிரத்தினத்தை சீண்டியுள்ளார் ப்ளூ சட்டை. ஆரம்பத்தில் இருந்தே பல முறை மணிரத்தினத்தை சீண்டியிருக்கிறார் ப்ளூ சட்டை.
ஏற்கனவே மணிரத்னம் ஒரு ஆர்எஸ்எஸ் வலதுசாரி ஆதரவாளர், தனது வலதுசாரி கருத்துக்களை மறைமுகமாக படங்களில் திணித்துவிடுவார், தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் அது நிரூபணமாகியுள்ளது, பொன்னியின் செல்வன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் காவி கொடியை பறக்க விட்டு அதை நிரூபித்துள்ளார் மணிரத்னம் என்று ட்வீட் செய்துள்ளார் ப்ளூ்சட்டை. பலர் அது காவி கொடியே இல்லை சிவப்பு கொடி எடிட்டிங்கால் அது காவியாக தெரிகிறது என்றும், படம் வருவதற்கு முன்பே தனது வெறுப்பு பிரச்சாரத்தை தொடங்கி விட்டார் ப்ளூ சட்டை என்றும் நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர்.