Categories: சினிமா

விநாயகரை ஏன் Vijay கொண்டாடவில்லை..! சர்ச்சையை கிளப்பிய Bluesattai Maran..!

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலிப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது சினிமாவை விட்டுவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட இருக்கிறார்.கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கிய இவர், அண்மையில் தனது கொடியை அறிமுகம் செய்து இருந்தார். மேலும் தனது மாநாட்டையும் பிரம்மாண்டமாக நடத்த நடிகர் விஜய் திட்டமிட்டு இருக்கிறார். அதற்கான வேளைகளில் விஜய் தற்போது இறங்கி உள்ளார்.

விநாயகரை ஏன் Vijay கொண்டாடவில்லை..! சர்ச்சையை கிளப்பிய Bluesattai Maran..! 1

அதே சமயம் தனது கட்சியை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அங்கீகரித்து இருப்பதாக இன்று தெரிவித்தும் உள்ளார். இந்நிலையில் நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் விஜய் யாருக்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவிக்கவில்லை, இது மிகப்பெரிய சர்ச்சையாகி உள்ளது. பாஜகவை சேர்ந்த வினோஜ் செல்வம் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத விஜய்க்கு கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் சினிமா விமர்சகர் ப்ளூசட்டை மாறன் இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், அஜித் விநாயகரை பாடலில் பயன்படுத்தியதை சுட்டிக்காட்டி விஜய் ஏன் இதுவரை விநாயகரை கொண்டாடவில்லை என்பது போல கருத்தை பதிவிட்டுள்ளார். இவரின் இந்த கருத்துக்கு ரசிகர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

வெளியிட்டது

புதிய செய்திகள்