Categories: சினிமா

நீதான் தைரியமான ஆளாச்சே.! என்ன செய்ய போற? கெளதம் வாசுதேவ் மேனனை வச்சி செய்யும் ப்ளூ சட்டை

வெளியிட்டது

ப்ளூ சட்டை மாறனை இறங்கி ஏதாவது செய்யலாம் என்று தோன்றுகிறது என கௌதம் வாசுதேவ் மேனன் பேசியதற்கு, காலையிலிருந்து ட்விட்டரில் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறார் ப்ளூ சட்டை மாறன். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான படம் தான் வெந்து தணிந்தது காடு. இந்த படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் கடுமையான நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்திருந்தார். மேலும் தனிப்பட்ட தாக்குதலிலும் ஈடுபட்டிருந்தார். சிலரை உருவக் கேலியும் செய்திருந்தார். இதனால் கடுப்பான கௌதம் வாசுதேவ் மேனன் நேற்று ஒரு பேட்டியில், மாறனை இறங்கி ஏதாவது செய்து விடலாம் என்று தோன்றுவதாக பேசினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக ப்ளூ சட்டை மாறன் இன்று காலை முதலே ட்விட்டர் பக்கத்தில் கௌதம் வாசுதேவ் மேனனை வச்சு செய்து வருகிறார்.

இரவின் நிழல் படம் வெளியான போது இதே போல் தான் பார்த்திபனை சண்டைக்கு இழுத்தார் ப்ளூ சட்டை மாறன். மேலும் தற்போது எந்த விமர்சனமாக இருந்தாலும் சரி, பார்த்திபன் ஒரு அவார்ட் பைத்தியம் என அவரை தொடர்ந்து கேலி செய்து வருகிறார். இந்த நிலையில் பார்த்திபன் ப்ளூ சட்டை மாறனுக்கு பதில் சொல்லாமல் அமைதியாகிவிட, தற்போது பார்த்திபன் குறித்து அவ்வளவாக பேசுவதில்லை. இந்த நிலையில் வெந்து தணிந்தது காடு பட வெற்றி விழாவின்போது, சிம்பு உருவக் கேலி செய்யாதீர்கள் என்று பேசியபோது, சிம்புவை வம்பிழுத்து சில ட்வீட்டுகளை போட்டு வந்தார் ப்ளூ சட்டை. இந்த நிலையில் பார்த்திபன், சிம்பு என பழைய இரண்டு பேஷண்ட்களையும் டிஸ்சார்ஜ் செய்துவிட்டு, புதிய பேஷண்டாக கௌதம் வாசுதேவ் மேனனை அட்மிட் செய்திருக்கிறார் ப்ளூ சட்டை.

நீதான் தைரியமான ஆளாச்சே.! என்ன செய்ய போற? கெளதம் வாசுதேவ் மேனனை வச்சி செய்யும் ப்ளூ சட்டை 1

சாதிப் பெயரை பின்னால் போட்டுக்கொள்ள விரும்பாத தமிழகத்தில் சாதியை அடையாளமாக காட்டும் கௌதம் வாசுதேவ் மேனன், இறங்கி செய்யப் போகிறேன் என்று சொல்கிறாயே நீ தான் தைரியமா ஆளாச்சே பயப்படாதே இன்னைக்கு இறங்கு என்று ட்வீட்டை போட்டுள்ளார். பின்னர் கொஞ்சம் தண்ணி இருந்தா வைங்கப்பா பயத்துல ரொம்ப நேரமா கத்திட்டு கிடக்கு, செத்து கித்து போய்ட போது என்றும், இறங்கி செய்தல் என்றால் அடியாட்களை விட்டு அடித்தல், வழக்கு போட்டு சிறையில் தள்ளுதல், மார்க்கெட்டை காலி செய்தல், தனது படத்தில் வருவது போல லோவர் பேஸ்மென்ட் பார்க்கிங்கில் துப்பாக்கியால் சுடுதல் இதெல்லாம் தான் இறங்கி செய்தலா? என்று லிஸ்ட் போட்டு கலாய்த்து இருக்கிறார்.

 

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்