Categories: சினிமா

Vijayakanth மட்டும் இருந்துருக்கணும்..! Karthi-ஐ கலாய்த்த Bluesattai Maran..!

வெளியிட்டது

திருப்பதியில் நடைபெற்று வரும் லட்டு சர்ச்சை குறித்து பேசி நடிகர் கார்த்தி அம்மாநில முதலமைச்சர் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்டு உள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை தமிழ் சினிமாவில் ஏற்படுத்தி இருக்கிறது. லட்டு சர்ச்சை குறித்து பெரிதாக எதுவுமே நடிகர் கார்த்தி கருத்து சொல்லாத நிலையில், எதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என ரசிகர்கள் கொதித்து பேசி வருகின்றனர்.

 

இந்நிலையில், இவ்வாறு தப்பு செய்யாமல் மன்னிப்பு கேட்ட கார்த்தியை , சினிமா விமர்சகர் ப்ளூசட்டை மாறன் விமர்சனம் செய்து உள்ளார். அந்த பதிவில், நடிகர் விஜயகாந்த் இருந்திருந்தால் ஒருபோதும் மன்னிப்பு கேட்டு இருக்க மாட்டார் எனவும், காவேரிக்கு எதிராக பேசி கர்நாடகாவில் நடிகர் சத்யராஜ் மன்னிப்பு கேட்டதை போல நீங்களும் மன்னிப்பு கேட்டு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் படங்கள் தெலுங்கிலும் வெளியாகி பாண் இந்தியா ஸ்டாராக வரவேண்டும் என சூர்யா சொன்னதால் மட்டுமே கார்த்தி மன்னிப்பு கேட்டு இருப்பார் எனவும், எல்லாரும் தலைவர் மாதிரி தெரியாது என்று சொல்ல முடியுமா என நடிகர் ரஜினிகாந்தையும் கலாய்த்து பதிவிட்டு உள்ளார். இவரின் இந்த பதிவுகள் இணையத்தில் ரசிகர்களிடம் பல்வேறு கருத்துக்களை பெற்று வருகின்றது.

 

வெளியிட்டது

புதிய செய்திகள்