வாரிசு படத்தின் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வரும் நிலையில் தற்போது ப்ளூ சட்டை மாறன் வசூல் குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். கடந்த பொங்கலுக்கு வெளியான விஜயின் வாரிசு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஃபேமிலி சென்டிமென்ட் கொண்ட படத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடித்திருக்கிறார் தளபதி விஜய். இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி சுமார் 25 நாட்களை கடந்த பிறகும் சக்கை போடு போட்டு வருகிறது. 27 நாட்கள் ஆன நிலையில் படத்தின் வசூல் குறித்த அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வருகின்றன. இந்த தகவலை படத்தை தயாரித்த வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து வருகிறது. படம் வெளியான முதல் நாளே உலக அளவில் சுமார் 17 கோடி முதல் 19 கோடி ரூபாய் வசூல் ஆனதாக தகவல்கள் வெளியானது.

பொங்கல் தினத்தன்று அஜித்தின் துணிவு படமும் வெளியானதால் இருவரில் யார் வின்னர் என்ற கேள்வி ரசிகர்களிடையே தொடர்ந்து எழுந்து வந்தது. மேலும் பொங்கல் வின்னர் என்கிற ஹேஷ் டேக்கும் ட்விட்டரில் டிரெண்டாக தொடங்கியது. இதனால் பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்கள் குறித்து வாரிசு படத்தின் படக் குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க தொடங்கியது. 11 வது நாள் முடிவில் சுமார் 250க்கும் அதிகமான கோடிகளை வசூல் செய்திருப்பதாக தங்களது twitter பக்கத்தில் புதிய போஸ்டர் உடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது படக் குழு. மேலும் பொங்கல் வின்னர் வாரிசு தான் என்று குறிப்பிட்டு இருந்தார்கள். இந்த நிலையில் 27-வது நாள் முடிவில் சுமார் 300 கோடி ரூபாய் வசூலை பெற்றிருப்பதாக நேற்று படக் குழு அறிவித்து இருந்தது. ஏற்கனவே 11 நாள் முடிவில் 250 கோடி வசூல் என்கிற அறிவிப்பை பலரும் கலாய்த்தும் கிண்டல் அடித்தும் வந்தனர். தற்போது 25 நாள் முடிவில் 300 கோடி வசூல் என்பதை ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.
திரைப்படங்களை முதல் நாளே பார்த்துவிட்டு படங்களில் இருக்கும் நிறை குறைகளை கூறுபவர் தான் ப்ளூ சட்டை மாறன். திரைவிமர்சகரான இவர் எப்பொழுதும் நடிகர்கள் பற்றியும் திரைப்படங்கள் பற்றியும் இயக்குனர்கள் பற்றியும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். அந்த வகையில் வழக்கம் போல வாரிசு திரைப்படத்தை பார்த்துவிட்டு இது ஹிந்தி சீரியலின் ரீமேக் என்று கடுமையான விமர்சனங்களை கொடுத்திருந்தார் ப்ளூ சட்டை மாறன். இந்த நிலையில் தற்போது அவர் 300 கோடி வசூலை உலக மகா உருட்டு என்று கடுமையாக விமர்சித்து ட்விட்டரில் பதிவு ஒன்றே போட்டு இருக்கிறார். அதற்கு விஜய் ரசிகர்கள் பலரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.