Categories: சினிமா

எதுக்கு..?தேவையில்லாத வேலை பார்த்து சண்டை மூட்டிவிட்ட ப்ளூ சட்டை மாறன்…அடித்து கொல்லும் ரசிகர்கள்.

வெளியிட்டது

சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன், ரசிகர்களிடம் பிரபலம். கிட்டத்தட்ட வெளியாகும் அனைத்து படங்களுக்கும் எதிர்மறையான விமர்சங்களை கொடுத்து வருகிறவர். பெரும்பாலும் பெரிய நடிகர் படங்களை முற்றிலும் எதிர்த்தே அவருடைய விமர்சங்கள் அமையும். தமிழ் மட்டுமின்றி வெளியாகும் அனைத்து படங்களுக்கும் அவர் விமர்சனம் செய்து வருகிறார்.

எதுக்கு..?தேவையில்லாத வேலை பார்த்து சண்டை மூட்டிவிட்ட ப்ளூ சட்டை மாறன்...அடித்து கொல்லும் ரசிகர்கள். 1

ஒரு படம் கூட இவரிடம் நல்ல விமர்சனத்தை பெற்றதாக தெரியவில்லை. அஜித் விஜய் படங்கள் வெளிவரும் வரும் போது படத்தை எதிர்பார்த்து காலத்திற்கும் ரசிகனை போல இவருடைய விமர்சனத்தை எதிர்பார்த்தும் ஒரு கூட்டம் காது இருக்கும். இப்படி விமர்சனம் மூலம் பெற்ற புகழ் நடுவில் சொந்தமாக ஒரு படமும் எடுத்து வெளியிட்டார். அந்த படம் வெளியாகும் முன் பெரிய சலசைப்பை உண்டாகிய போதிலும் வெளியான பிறகு எந்த அடையாளமும் இன்றி காணாமல் போனது.

இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் சில ரசிகர்கள் தூங்குவது போன்ற படத்தை மட்டும் பதிவிட்டு அந்த தலைப்பும் கொடுக்கவில்லை. இது தன இப்பொது ரசிகர்களிடையே பெரும் பிரச்னையை உண்டாக்கி உள்ளது. ஏன்னெனில் நேற்று மே 12ஆம் தேதி தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் “சர்காரு வாரு பாட்ட” என்ற படம் வெளியாகியுள்ளது, அதே போல இன்று தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டான்” திரைப்படம் வெளியாகியுள்ளது.

இப்பொது எந்த தலைப்பும் கொடுக்காமல் மாறன் போட்டுள்ள பதிவு எந்த படத்தை குறித்து என தான் ரசிகர்கள் காட்டமாக ஒருவரை ஒருவர் விமர்சித்து வருகிறார்கள். மகேஷ் பாபு ரசிகர்கள் நேற்றே மாறன் “சர்காரு வாரு பாட்ட” படத்தை விமர்சனம் செய்து வீடியோ பதிவிட்டுள்ளதால், அது சிவகார்த்திகேயனின் “டான்”படத்தை தான் குறிக்கிறது எனவும், சிவாவின் ரசிகர்கள் மாறன் இன்னும் படத்தை பார்த்திருக்க வாய்ப்பு இல்லை, அதனால் இது மகேஷ் பாபுவின் படத்தை தான் குறிக்கிறது என கூறிவருகிறார்கள்.

இவர்கள் இப்படி சாண்டியிட்டு கொள்ளும் நிலையில் மாறனோ அமைதியாக நடக்கும் சண்டைகளை வேடிக்கை பார்த்து வருகிறார். அவரே உண்மையை சொல்லும் வரையில் எந்த படம் என யாருக்கும் தெரிய போவதில்லை, இந்த சண்டையும் முடிய போவதில்லை.

வெளியான இரண்டு படங்களில் சிவகார்திகேயனின் படம் நல்ல விமர்சங்களை பெற்றுள்ளது. மகேஷ் பாபுவின் “சர்காரு வாரு பாட்ட” படம் ரசிகர்களை திருப்தி படுத்தினாலும், போது ரசிகர்களிடம் சாதாரண விமர்சனத்தையே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்