Categories: சினிமா

தலையில் பலத்த அடி, மூளையில் ரத்த கசிவு, கோமா நிலையில் மருத்துவமனையில் பாம்பே ஜெயஸ்ரீ..??

வெளியிட்டது

பிரபல பின்னணி பாடகியாக இருக்கும் பாம்பே ஜெயஸ்ரீக்கு தற்போது மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் அவர் கோமா நிலையில் இருப்பதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தமிழ் திரையுலகில் குறிப்பிடத்தகுந்த இடத்தில் இருப்பவர் பாம்பே ஜெயஸ்ரீ. இவர் தென்னிந்திய திரைப்படங்களில் முன்னணி இசையமைப்பாளர்களாக இருக்கும் ஹாரிஸ் ஜெயராஜ், இளையராஜா ஏ ஆர் ரகுமான், வித்யாசாகர், யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட பல முன்னணி இசையமைப்பாளர்களின் படங்களில் பாடியிருக்கிறார். இவர் மின்னலே திரைப்படத்தில் வசீகரா என்கிற பாடலின் மூலமாக பெரிதாக அறியப்படுகிறார் மேலும் இவர் நின்னை சரணடைந்தேன், சுட்டு விழிச்சுடரே, நறுமுகையே நறுமுகையே, வசீகரா, முதல் கனவே உனக்குள் நானே, செல்லமே செல்லமே உள்ளிட்ட பல நல்ல பாடல்களை தமிழ் திரை உலகிற்க்கு அளித்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

தலையில் பலத்த அடி, மூளையில் ரத்த கசிவு, கோமா நிலையில் மருத்துவமனையில் பாம்பே ஜெயஸ்ரீ..?? 1
பிரபல கர்நாடக இசைப் பாடகியும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான பாம்பே ஜெயஸ்ரீ, இங்கிலாந்தில் சுற்றுப்பயணத்தில் இருந்தபோது, அனீரிசிம் நோயால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இசை கச்சேரி ஒன்றிற்காக சென்றிருந்த அவருக்கு மிகுந்த கழுத்து வலி ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவர் அவதிப்பட்டு வந்ததாகவும் தெரிகிறது. மேலும் அறையில் தனியாக இருக்கும் பொழுது நடக்க முடியாமல் தவறி கீழே விழுந்து இருக்கலாம் என்றும் அதனால் தலையில் அடிபட்டு அவர் சுயநினைவை இழந்திருக்கலாம் என்றும் தகவல்கள் கொடி கட்டி பறந்து வருகிறது. அனீரிசம் என்பது தமனி சுவரில் உள்ள பலவீனத்தால் ஏற்படும் தமனியின் விரிவாக்கம் ஆகும். லிவர்பூலில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த நிலையில் இன்று ஹோட்டல் ஊழியர் ஒருவர் அவரது அறைக்கு சென்று பார்த்த போது அவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு தற்போது ஒரு அறுவை சிகிச்சை முடிந்துள்ளதாக தெரிகிறது. அவருக்கு கீ ஹோல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது வெளியாகியுள்ள மருத்துவ அறிக்கைகளின் படி அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த தகவல்கள் எல்லாம் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. மேலும் விரைவில் அவர் குணமடைந்து சென்னைக்கு அழைத்து வரப்படுவார் என்றும் கூறப்படுகிறது. பாம்பே ஜெயஸ்ரீ தரப்பிலிருந்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விளக்கமும் வரவில்லை. மும்பையில் வளர்ந்த தமிழ் குடும்பம் என்பதால் அவர் பாம்பே ஜெயஸ்ரீ என்று அறியப்படுகிறார். மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டு சிறந்த பாடகிக்கான பத்மஸ்ரீ விருதையும் அவர் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலமாக அவரின் பாடல்கள் இன்ஸ்டாகிராம் ரீல்ஸிலும் சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் அவர் விரைந்து குணமடைய வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பிரார்த்தனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். Watch the Below Video..! 

Youtube Video Embed Code Credits: Thanthi TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்