நடிகர் சூரி பற்றி தற்போது போண்டாமணி கடுமையாக விமர்சித்திருக்கிறார். வேலையில்லாமல் கஷ்டப்பட்ட பொழுது சூரிக்கு இடம் கொடுத்து சாப்பாடு போட்டது நான் எங்கள் வீட்டில் சாப்பிட்டவர் சூரி. ஆனால் நான் கஷ்டப்படும் நேரத்தில் அவர் ஒரு உதவி கூட செய்யவில்லை என்று சூரி பற்றிய காட்டமான விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார் போண்டா மணி. கிட்னி இரண்டும் செயலிழந்த நிலையில் சமீப காலமாக இணையத்தில் நண்பர்கள் மற்றும் சினிமா துறையினரிடம் உதவி கேட்டு வருகிறார் போண்டாமணி. இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அகதியாக வந்தவர். நடிப்பு மீது இருக்கும் ஆர்வத்தின் காரணமாக சினிமா படங்களில் நடிக்கத் தொடங்கினார். அவருக்கு இயக்குனர் கே பாக்யராஜ் “பவுனு பவுனுதான்” என்கிற படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வழங்கினார். இந்த படத்தில் நடிகராக வாழ்க்கையை ஆரம்பித்த போண்டாமணி பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பல படங்களில் நடிக்க தொடங்கினார். மணிக்குயில், பொன்விலங்கு, செல்வா, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, சுந்தரா ட்ராவல்ஸ், வின்னர், வேலாயுதம், ஜில்லா என சுமார் 150க்கும் அதிகமான படங்களில் காமெடியனாக நடித்திருக்கிறார் போண்டாமணி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு சாக்கடையில் விழுவது போன்ற காட்சிகள் எடுக்கப்பட்டது. இதனால் சாக்கடை தண்ணீர் நுரையீரலில் பரவி அவருக்கு கிட்னி கூட செயலிழந்து விட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட போண்டாமணி பின்னர் பலரின் உதவியால் உயிர் பிழைத்தார். அவருடைய சிகிச்சைக்கு பணம் கொடுத்து உதவுமாறு கண்ணீருடன் இவர் வெளியிட்ட வீடியோ வைரலாகிய தொடங்கி நிலையில் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் மற்றும் பல பிரபலங்கள் அவருக்கு உதவி செய்தனர். அது மட்டும் இல்லாமல் தமிழக அரசும் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை சிறந்த சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்த அவர் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். தனக்கு தற்போது டயாலிசிஸ் நடந்து வருவதாகவும் அறுவை சிகிச்சை செய்வதற்கு தன்னுடைய இரத்த வகை ஒத்துப் போகவில்லை. அதே இரத்த வகை ஒத்துப்போய் உறுப்புகள் கிடைக்க ஐந்து வருடங்கள் கூட ஆகலாம்.
மூளைச் சாவு அடைந்தவர்களின் கிட்னியை எடுத்து தனக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இதை மறைந்த மயில்சாமி தனக்காக ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். நீ எதற்கும் கவலைப்படாதே, யாரும் இல்லை என்று கவலைப்படாதே நான் இருக்கிறேன் என்று சொல்லி தனக்காக மயில்சாமி அவ்வளவு ஏற்பாடு செய்தார் ஆனால் தற்போது அவரும் மறைந்து விட்டார். வடிவேலுவுக்கு பிறகு தான் நான் வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்தேன். ஆனால் அவர் தனக்கு எந்த உதவியும் செய்யவில்லை. சூரி ஒரு போன் கூட பண்ண வில்லை. அவர் எங்கள் வீட்டில் தான் சாப்பிட்டு வந்தார். மதுரையிலிருந்து பட வாய்ப்புகள் தேடி அலைந்தபோது சூரியை தனது வீட்டில் தங்க வைத்து சாப்பாடு போட்டு கவனித்துக் கொண்டேன். நகைச்சுவை தொடரில் நடிப்பதற்காக வாய்ப்புகள் கூட வாங்கிக் கொடுத்தேன். தினக்கூலியாக 200 ரூபாய் சம்பளம் கொடுத்தார்கள். ஆனால் தனக கு உடல்நிலை சரியில்லை என்று சொன்னபோது ஒரு போன் கூட போட்டு கேட்கவில்லை. நன்றி மறந்து விட்டார் சூரி என்று காட்டமாக விமர்சித்து இருக்கிறார். அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Nakkheeran Studio