Categories: சினிமா

துணிவு படம் எப்போ வெளியாகுதுனு தெரியுமா? அதிகாரபூர்வமாக அறிவித்த போனி கபூர்

வெளியிட்டது

அஜித் குமார் நடித்து வரும் துணிவு படம் பொங்கலுக்கு வெளியாகும் என்பதை அதன் தயாரிப்பாளர் போனி கபூர் தற்போது ட்விட்டரில் அறிவித்துள்ளார். துணிவு பொங்கல் என்று அவர் ஒரு புது போஸ்டரையும் வெளியிட்டு இருக்கிறார். இதன் மூலம் படம் பொங்கலுக்கு வெளியாவது உறுதியாகியுள்ளது. அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் துணிவு. அஜித்குமாரின் கடைசியாக நடித்து வெளிவந்த வலிமை படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை தரவில்லை. இதனால் மீண்டும் அதே தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருடன் கைகோர்த்து இருக்கிறார் அஜித் குமார். போனி கபூர் தயாரிப்பில், எச் வினோத் இயக்கத்தில் தனது 61வது படமான துணிவு படத்தில் நடித்து வருகிறார் அஜித். இந்த படத்தை ஹைதராபாத்தில் எடுத்து வருவதால், அவர் சென்னையில் இருந்து அடிக்கடி ஹைதராபாத்திற்கு சென்று வரும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.

துணிவு படம் எப்போ வெளியாகுதுனு தெரியுமா? அதிகாரபூர்வமாக அறிவித்த போனி கபூர் 1

வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருவதாகவும், இரட்டை வேடத்தில் அஜித் நடித்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் படத்தின் படப்பிடிப்புகள் 90 சதவீதம் முடிந்து சண்டை காட்சிகளுக்காக படக் குழு தாய்லாந்துக்கு செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. சண்டை காட்சிகள் முடிந்த பின்பு போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று, படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று ஏற்கனவே பல யூகங்கள் கிளம்பி இருந்த நிலையில், தற்போது அதை உறுதிப்படுத்தும் விதமாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தற்போது ட்விட்டரில் அறிவித்திருக்கிறார். துணிவு பொங்கல் என்று அவர் ஒரு போஸ்டரை பகிர்ந்து இருக்கிறார். அதில் துணிவு படத்தை வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.

 

துணிவு படத்தில் தல அஜித்துக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடிக்கிறார். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். வாலி படத்திற்கு பின்னர் அஜித் கதாநாயகன் ஆகவும் வில்லனாகவும் இரட்டை வேடங்களில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. தற்போது துணிவு படம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதால் வீரம் ஜில்லா படங்களுக்குப் பிறகு, விஜய் அஜித் மீண்டும் நேருக்கு நேர் மோத இருப்பதை பார்க்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர். துணிவு படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று இதுவரை அறிவிக்காமல் இருந்து வந்த படக்குழு, தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. விரைவில் வாரிசு படமும் பொங்கலுக்கு வெளியாகும் என்பதை படக்குழு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்