Categories: சினிமா

தப்பை தட்டி கேட்க தில்லு போதும்..! ஜெயம் ரவி காமெடியில் கலக்கும் Brother படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது..!

வெளியிட்டது

ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அறிமுகமாகியவர் நடிகர் ஜெயம் ரவி.இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இவர் அண்ணன் ஜெயம் ராஜா இயக்கத்தில் வெளியான தனி ஒருவன் படம் ஜெயம் ரவியின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.இப்படத்திற்கு பின்னர் தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து ஜெயம் ரவி நடித்து வருகிறார். இவருக்கு அடுத்ததாக தனி ஒருவன் 2 படம் உருவாக உள்ளது. இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியாகி இருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தப்பை தட்டி கேட்க தில்லு போதும்..! ஜெயம் ரவி காமெடியில் கலக்கும் Brother படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது..! 1

இவர் தற்போது இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் பிரதர் படத்தில் நடித்துள்ளார். பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார். இதனால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் சற்று அதிகமாகி இருக்கிறது. இப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது. இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகி இருக்கிறது.

தற்போது இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டு உள்ளது. ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு காமெடி கதைக்களத்துடன் குடும்ப படமாக உருவாகி இருப்பதாய் ட்ரைலரில் காண முடிகிறது. படம் வெற்றிபெற ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வெளியிட்டது

புதிய செய்திகள்