57 வயது ஆகும் பப்லு 24 வயது பெண் ஒருவரை சமீப காலமாக காதலித்து வருகிறார். அந்த பெண்ணுடன் சேர்ந்து கொண்டு பேட்டிகளையும் அளித்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தவர் நடிகர் பப்லு என்கிற பிரித்விராஜ். பின்னர் இவர் நடித்த ராஜராஜேஸ்வரி, வாணி ராணி போன்ற தொடர்கள் மூலமாக இவர் மிகவும் பிரபலமானார் .ஜோடி நம்பர் ஒன் சீசன் 2வில் இவர் போட்டியாளராக கலந்து கொண்ட போது, இவருக்கும் நடிகர் சிம்புவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பிறகு சின்னத்திரைகளில் மட்டுமே நடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவர் சமீப காலமாக 24 வயது பெண் ஒருவரை காதலித்து வருவதாக கூறப்பட்டது. அதை ஒரு பேட்டியில் அவரே ஒப்புக்கொண்டு தற்போது அந்த பெண்ணுடன் சேர்ந்து பல பேட்டிகளை அளித்து வருகிறார் பப்லு. கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.!

இவருக்கும் பீனா என்கிற பெண்மணிக்கும், 1994 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு அஹித் என்கிற மகன் இருக்கிறார். இவர் ஆட்டிசம் குறைபாடு உள்ளவர். ஆறு வருடங்களுக்கு முன்பு பீனா, மகனை பார்த்துக் கொள்ள முடியவில்லை என்று சொல்லி பப்லுவை விட்டு பிரிந்திருக்கிறார். ஆட்டிசம் குறைபாடு உள்ள மகனுடன் தனியாக வாழ்ந்து வந்தார் நடிகர் பப்லு. சமீபத்தில் தான் ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும் அவர் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்றும் பப்லு கூறியிருந்தார். இவர்களின் இந்த பேட்டிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக தொடங்கியது. பலரும் பப்லுவை திட்டத் தொடங்கினர்.
இந்த வயதில் உங்களுக்கு பெண் சுகம் கேட்கிறதா என்று கேள்விகள் எழுப்ப ஆம் எனக்கு தேவைப்படுகிறது என்று ஒரு பேட்டியில் பதில் அளித்து இருந்தார் பப்லு. தற்போது ஒரு பப்லுவும் அவரது வருங்கால மனைவியும் சேர்ந்து செய்த ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது் அதில் பப்லு தனது வருங்கால இளம் மனைவியுடன் சேர்ந்து ஒரு ஹிந்தி பாடலுக்கு ரீல்ஸ் செய்திருக்கிறார். அந்த வீடியோவை பலரும் பகிர்ந்து பப்லுவை கலாய்த்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the below video..
Youtube Video Code Embed Credits: King Prithiveeraj