Categories: சமூகம்

புல் புல் புயல் தாக்கம்! தேவைப்படும் உதவியை மத்திய அரசு செய்யும்.. மோடி!!

வெளியிட்டது
புல் புல் புயல் தாக்கம்! தேவைப்படும் உதவியை மத்திய அரசு செய்யும்.. மோடி!! 1

வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான ‘புல்புல்’ எனும் பெயரிடப்பட்டிருந்த இந்த புயல், நேற்று மேற்கு வங்க கடலோரம் மற்றும் வங்கதேச எல்லையில் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 100 முதல் 120 கி.மீ வேகத்தில் காற்று வீசியது.

இந்த புயல்காற்று காரணமாக, வங்கதேச தலைநகர் டாக்கா உள்பட பல்வேறு பகுதிகளிலும் நேற்று முழுவதும் மழை கொட்டி தீர்த்தது. இதன்பிறகு, வங்க கடலில் இருந்து சுந்தரவன கடலோர பகுதியை நோக்கி புல்புல் புயல் நகர்ந்து செல்லும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில், புல்புல் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியிடம், பிரதமர் மோடி தொலைபேசியில், பேசி கேட்டறிந்தார்.

இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்: கிழக்கு இந்தியாவின் சில பகுதிகளில் ஏற்பட்ட புயல் மற்றும் பலத்த மழை குறித்து ஆய்வு செய்தேன். மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியுடனும் பேசி இருக்கிறேன் தேவைப்படும் அனைத்து உதவிகளும் மத்திய அரசால் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்