Categories: சமூகம்

பேருந்தை வேகமாக ஓட்டியதால் நூதன தண்டனை! பேருந்தின் மீது ஏறி தோப்புக்கரணம் போட்ட ஓட்டுநர்கள்!!

வெளியிட்டது
பேருந்தை வேகமாக ஓட்டியதால் நூதன தண்டனை! பேருந்தின் மீது ஏறி தோப்புக்கரணம் போட்ட ஓட்டுநர்கள்!! 1

மத்திய பிரதேச மாநிலத்தில் சில ஓட்டுநர்கள் பேருந்துகளை இந்தூரிலிருந்து மோவ், மன்பூர் மற்றும் பிதாம்பூர் வரை பேருந்துகளை அதிவேகமாக ஓட்டியதாகவும், நெரிசலான இடங்களில் அதிவேகமாக செல்வதாவும் ராவ் நகர் குடியிருப்புவாசிகள் குற்றம் தெரிவித்தனர். மேலும் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் மக்களை கவனிப்பதில்லை என்றும் கூறியிருந்தனர்.

இந்த தகவலை நகராட்சி தலைவர் சிவ்னாராயணிடம் மக்கள் அளித்தனர். ஓட்டுநர்களுக்கு நூதன தண்டணை வழங்க முடிவு செய்யப்பட்டு அப்பகுதி வாசிகள், நகராட்சி தலைவர் ஆலோசனை பேரில் அதிவேகமாக இயக்கிய பேருந்துகளின் ஓட்டுநர்களை பிடித்து பேருந்தின் கூரை மீது நின்று ஓட்டுநர்களை தோப்புக்கரணம் போட சொன்னார்கள்.

பொதுமக்கள் கூடி நிற்க சாலையின் நடுவே நடைபெற்ற இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.பேருந்தின் கூரை மீது ஓட்டுநர்களை தோப்புக்கரணம் போடச்செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்