Categories: சினிமா

ஆண்டவர்’னா சும்மாவா!!கேன்ஸ் திரைப்பட விழாவில் கலக்கலாக ஹெலிகாப்டரில் சென்று இறங்கும் கமல்!!!

வெளியிட்டது

சில காலமாக சினிமாவில் இருந்து விலகியிருந்த கமல் தற்போது தன்னுடைய 67 வயதில் மீண்டும் சுறுசுறுப்பாக படங்களில் நடிக்க  துவங்கியுள்ளார். வருகிற ஜூன் 3ஆம் தேதி நீண்ட வருடங்களாக கமல் படத்திற்கு இல்லாத ஒரு எதிர்பார்ப்பில், கமலுடன் விஜய் சேதுபதி,ஃபகத் ஃபாசில், செம்பன் வினோத்,நரேன்,சிறப்பு தோற்றத்தில் சூர்யா என பலர் நடித்துள்ள விக்ரம் படம் வெளியாக உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

4 ஆண்டுகள் பிறகு திரைக்கு திரும்பும் கமல் தொடர்ந்து படங்களில் மும்முரம் காட்டி வருகிறார். தன்னுடைய ராஜ் கமல் தயாரிப்பில் சிவகார்த்திக்கேயன், சாய் பல்லவி கூட்டணியில் ஒரு படம் தயாரிக்க உள்ள இவர், அடுத்து முத்தையா, பா.இரஞ்சித் போன்ற இயக்குனர்களுடன் சேர்த்து படம் நடிக்கவும் தயாராகி வருகிறார்.

ஆண்டவர்'னா சும்மாவா!!கேன்ஸ் திரைப்பட விழாவில் கலக்கலாக ஹெலிகாப்டரில் சென்று இறங்கும் கமல்!!! 1

இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் பாரிஸில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில், அவர் பங்கெடுத்து கொள்ள பிரான்ஸ் சென்றுள்ளார். அப்போது அவர் ஹெலிகாப்டரில் சென்று இறங்கும் காட்சி இப்பொது சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.

இந்த வயதிலும் மனிதர் எவ்ளோ ஸ்மார்ட்டாக உள்ளார் என பலரும் அந்த விடியோவை அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர். இவருடைய “விக்ரம்” பாத்தின் ப்ரோமோஷனில் ஒன்றாகவே அவர் இந்த விடியோவை வெளியிட்டுளளார்.

விக்ரம் படம் கமலின் 1987இல் வெளியான அதே தலைப்புடைய படத்தின் தொடர்ச்சியை என கூறப்படுகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசை அமைத்துள்ள இந்த படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ரசிகர்கள் பலரும் படம் பார்க்க ஆவலாக காத்துள்ளனர். படத்திலிருந்து வெளியான “பத்தல பத்தல” என்ற பாடல் கமலின் எழுத்தில், குரலில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Video Courtesy – News 18 tamizh

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்