நடிகர் தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாக இருக்கிறது. அந்த திரைப்படத்தின் பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. தமிழின் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் கடைசியாக நடித்த படம் திருச்சிற்றம்பலம். இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது. அதாவது 100 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்றுள்ளதாக தெரிகிறது. படம் வெளியாகி ஒரு மாதமாகும் நிலையில் கூட படம் இன்றளவும் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அடுத்ததாக அவர் வாத்தி, நானே வருவேன் போன்ற படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது புதிதாக அவர் ஒரு படத்தில் கமிட்டாகி உள்ளார். அது கேப்டன் மில்லர் திரைப்படம் ஆகும். இந்த படம் 1930 – 1940 களில் நடைபெற்ற கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்க இருக்கிறார். இந்த படத்தில் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க இருக்கிறார். இவர்களுடன் ஜான் கொக்கன், டேனியல் பாலாஜி, நாசர், பால சரவணன் போன்ற பலர் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கின்றனர். பிரபல நடிகர் சந்தீப் கிஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார் என்று தகவல் வெளியான நிலையில், தற்போது ஜி பி பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது ஒரு வரலாற்று திரைப்படம். இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் பூஜை இன்று தொடங்கி இருக்கிறது. அதன் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.
நடிகர் தனுஷ் தற்போது இரண்டு பெரிய படங்களில் கமிட்டாகி இருக்கிறார். ஒன்று வாத்தி, இந்த படம் தெலுங்கில் சார் என்ற பெயரில் வெளியாகிறது. மற்றொன்று நானே வருவேன் இந்த படத்தை தனுஷின் அண்ணன் செல்வராகவன் இயக்கி வருகிறார். இரண்டு படங்களில் இருந்தும் அவ்வப்போது அப்டேட்டுகள் கிடைத்து வருகின்றன. நானே வருவேன் திரைப்படம் செப்டம்பர் 29 ரிலீசாக இருக்கும் நிலையில் அடுத்தடுத்த படங்களில் தனுஷ் கமிட்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.