உடல் எடை மிக மெலிந்து அடையாளமே தெரியாமல் மாறி போன கேப்டன்.! வைரலாகும் சமீபத்திய புகைப்படம்

வெளியிட்டது

விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். அவருக்கு கேப்டன் விஜயகாந்த் கேக் ஊட்டி விடுவது போன்ற புகைப்படத்தை தனது instagram பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படத்தை பார்த்த பலருக்கும் கண்களில் கண்ணீரே வந்துவிடும் போலிருக்கிறது. அந்த அளவிற்கு கேப்டன் விஜயகாந்த் உடல் எடை மெலிந்து ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப் போயிருக்கிறார். 2005 ஆம் ஆண்டு தேமுதிக என்கிற மாபெரும் கட்சியை தொடங்கினார் விஜயகாந்த். இதைப் பார்த்த தமிழகத்தில் இரு பெரும் அரசியல் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவே கலக்கமடைந்தன. தமிழ் சினிமாவில் உச்சபட்ச நடிகராக இருந்து எம்ஜிஆர்க்கு பிறகு மாபெரும் கூட்டத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் கேப்டன் என்று சொன்னால் அது மிகையில்லை.

உடல் எடை மிக மெலிந்து அடையாளமே தெரியாமல் மாறி போன கேப்டன்.! வைரலாகும் சமீபத்திய புகைப்படம் 1

தன்னுடைய நடிப்புத் திறமையின் மூலமாக தமிழகம் எங்கும் கிராமம் தொடங்கி மூலை முடுக்கெல்லாம் ரசிகர் மன்றங்களை வைத்திருந்த ஒரு நடிகர் என்று சொன்னால் அது விஜயகாந்த் தான். இவருடைய பல படங்கள் திரையரங்கில் 100 நாட்களுக்கும் அதிகமாக ஓடி சாதனை படைத்திருந்தது. நடிகர் சங்க தலைவராக இருந்தபோது பல ஆண்டுகளாக அடைக்க முடியாமல் இருந்து வந்த கடனை சில நாட்களிலேயே, பல கலை நிகழ்ச்சிகள் நடத்தி அடைத்தார். மேலும் நலிவடைந்த கலைஞர்களுக்காக ஓய்வூதிய திட்டத்தையும் செயல்படுத்தி இருந்தார் விஜயகாந்த். பின்னர் அரசியலில் நுழைந்த அவர் எடுத்த எடுப்பிலேயே பத்து சதவீத வாக்குகளை பிடித்து திமுக அதிமுகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். ஆனால் அவரால் தொடர்ந்து அரசியலில் நடைபெற முடியவில்லை, தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது அவருடைய கட்சி தேமுதிக.


இந்த நிலையில் தொடர் தோல்விகளால் கேப்டன் விஜயகாந்த் இருக்கும் உடல்நிலை நலிவடைந்துள்ளது. அவர் பழையபடி செயல்பட முடியாமல் வீட்டிலேயே முடங்கி விட்டார். அவருடைய தொண்டர்களை மட்டும் அவ்வப்போது சந்தித்து வரும் கேப்டன், வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார் அவருக்கு தைராய்டு பிரச்சனையும் பேசுவதில் பிரச்சனை இருப்பதால் அவர் விரைவில் சிகிச்சை முடிந்து பழைய விஜயகாந்த் ஆக வருவார் என்று அவரது மனைவி தொடர்ந்து கூறி வருகிறார். இந்த நிலையில் தனது பிறந்த நாளை கொண்டாடியிருக்கும் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கிறார். அதில் கேப்டன் விஜயகாந்த் உடல் எடை மெலிந்து ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப் போயிருக்கிறார். இதை பார்த்த தேமுதிக தொண்டர்கள் சிங்கம் போல் இருந்த மனிதர் இப்படி ஆகிவிட்டாரே என்று தனது வேதனையை தெரிவித்து வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்