மத உணர்வை புண்படுத்தும் விதமாக காளி ஆவணப்படத்தின் போஸ்டர் உள்ளதாக கண்டனங்கள் எழுந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு இயக்குனர் லீனா மணிமேகலையின் இயக்கத்தில் உருவாகியுள்ள “காளி” என்ற படத்தின் போஸ்டர் வெளியானது. அதில் காளி வேடமணிந்த ஒரு பெண் சிகரெட் புகைப்பது போன்றும், ஒரு கையில் ஓரினச் சேர்க்கையாளரின் கொடியை பிடித்து இருப்பது போன்றும் இருந்தது. இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த படத்தை திரும்ப பெற வேண்டும் என்றும், லீனாவை கைது செய்ய வேண்டும் என்றும் வட இந்தியர்கள் கொதித்தனர். தொடர்ந்து வந்த மிரட்டல்களால், படம் வெளியான பிறகு என்னை பாராட்டுவீர்கள் என்றும், இழப்பதற்கு எதுவும் இல்லை, நம்புவதை பேசும் குரலோடு இருந்துவிட விரும்புகிறேன், அதற்கு விலை என் உயிர்தான் என்றால் தரலாம் என்றும் ட்வீட் செய்து இருந்தார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்

ஆனாலும் மனம் பொறுக்காமல் டெல்லி மற்றும் உத்திரபிரதேசத்தில் அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. கனடா நாட்டில் ரொரோண்டாவில் உள்ள அருங்காட்சியகத்தில் “ரிதம்ஸ் ஆஃப் கனடா” என்ற நிகழ்ச்சியில் காளி திரைப்படம் திரையிடப்பட்டது. அந்த படத்தை தனது சோஷியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார் லீனா.இந்த நிலையில் கடும் சர்ச்சைகள் எழுந்த நிலையில், காளி ஆவணப்படத்தை திரும்ப பெறுமாறு கனடாவுக்கான இந்திய தூதரகம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில் இந்து மத தலைவர்களிடம் இருந்து புகார் கடிதங்கள் வந்துள்ளது. இந்து கடவுள்களை அவமதிக்கும் வகையில் வெளியிடப்பட்ட அந்த படத்தை திரும்ப பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. லீனா மணிமேகலை ஒரு கவிஞர் ஆவார். பெண்ணியம் குறித்தும், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்தும், சாதி வன்முறைகள் குறித்தும் தொடர்ந்து கவிதைகள் எழுதி வந்தார்.
பறை, தேவதைகள், பலிபீடம் போன்ற ஆவணப்படங்களையும், செங்கடல், மாடத்தி போன்ற படங்களையும் இயக்கி இருந்தார்.
செங்கடல் படமானது இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு அகதிகளாக தஞ்சம் அடைந்தவர்கள் படும் இன்னல்கள் பற்றிய கதை. மாடத்தி படமானது குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக நடக்கும் சாதிய வன்முறைகள் குறித்த படம். இந்த மாடத்தி திரைப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல விருதுகளை வாங்கி குவித்துள்ளது. இந்த படம் மட்டும் சுமார் 15 விருதுகளை வாங்கியிருக்கும். ஓடிடி தளத்தில் வெளியான போதும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது மாடத்தி படம். தற்போது அவர் உருவாக்கியுள்ள காளி படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் அவர் அடுத்து என்ன செய்ய போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அந்த செய்தியை நீங்களும் காண, கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..Watch the below video..
Youtube Video Code Embed Credits: i Tamil News