Categories: சமூகம்

சாதி வாரி கணக்கெடுப்பு: ராமதாஸ் தலைமையில் போராட்டம்

சென்னையில் சமூகநீதியைக் காக்க சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு கோரி ஆர்ப்பாட்டம் பாமக தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வலியுறுத்தி பாட்டாளி இளைஞர் சங்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 06.02.2020 வியாழக்கிழமை தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.

சாதி வாரி கணக்கெடுப்பு: ராமதாஸ் தலைமையில் போராட்டம் 1

இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி, அரசியல் ஆலோசனைக்குழு தலைவர் பேராசிரியர் தீரன், புதுவை மாநில அமைப்பாளர் கோ.தன்ராஜ், வடக்கு மண்டல இணைப்பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் சமூகநீதியை முழுமையாக காக்க 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக மத்திய அரசு நடத்த வேண்டும். இதை வலியுறுத்தி வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தாவிட்டால், தமிழக அரசே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று இந்த போராட்டத்தில் பேசிய ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்