கயல் சீரியல் நடிகை சைத்ராவின் 30-வது பிறந்தநாள்.! செம்ம சர்ப்ரைஸ் செய்த நண்பர்கள்.! இதோ வீடியோ.!

வெளியிட்டது

கயல் சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் சைத்ரா ரெட்டி தற்போது தனது பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடி அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோ மற்றும் புகைப்படங்களுக்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது.

கயல் சீரியல் நடிகை சைத்ராவின் 30-வது பிறந்தநாள்.! செம்ம சர்ப்ரைஸ் செய்த நண்பர்கள்.! இதோ வீடியோ.! 1

பெங்களூருவில் பிறந்து வளர்ந்த சைத்ரா ரெட்டி நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தின் காரணமாக ஆரம்பத்தில் சில கன்னட சீரியல் நடிக்கத் தொடங்கினார். சென்னைக்கு வந்த அவர் முதல் முறையாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்ற சீரியலில் நடித்தார்.


முதல் சீரியலே வில்லியாக எதிர்மறை கதாபாத்திரமாக இருந்த போதிலும் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி பல தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார். தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்த சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் கயல் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மிகவும் நேர்மையான எதற்கும் பயப்படாத ஒரு பெண் கதாபாத்திரத்தில் நடித்து தற்போது அசத்தி வருகிறார் சைத்ரா ரெட்டி.


மேலும் சைத்ராவிற்கு சில படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. 2019 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ராக்கட் என்கிற படத்தின் மூலமாக வெள்ளித்திரையிலும் கால் பதித்தார். பின்னர் தல அஜீத்துடன் இணைந்து வலிமை படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் விஷமக்காரன் என்கிற ஒரு படத்திலும் நடித்திருக்கிறார். தற்போது சில கன்னட படங்களிலும் நடித்து வருகிறார் சைத்ரா.

சைத்ராவின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை அவருக்கும் ராகேஷ் நாராயன் என்பவருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ராகேஷ் திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆவார். திரைத்துறையைச் சேர்ந்த நபரையே சைத்ரா திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.


மக்களின் மனம் கவர்ந்த நடிகையாக இருக்கும் இவர் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் ஏதாவது ஒரு வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். தனது குடும்பம், நண்பர்கள் என அனைவருடனும் இவர் வீடியோக்களை எடுத்து அதை பகிர்வது இல்லை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

குறிப்பாக தனது தோழிகளான நட்சத்திரா, சபானா, ஸ்ரீநிதி, அவினாஷ் உள்ளிட்டவர்களுடன் இவர் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களுக்கு பல லைக்குகள் விழுவது வழக்கமாக இருக்கிறது. இந்த நிலையில் இன்று 30 ஆவது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார்.அவருக்கு அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் இணைந்து சர்ப்ரைஸ் செய்திருக்கின்றனர். அந்த வீடியோவை சைத்ரா தற்போது தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.


இந்த வீடியோவை பார்த்த பலரும் சைத்ராவிற்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். சைத்ராவிற்கு 30 வயது ஆகிவிட்டதா நம்பவே முடியவில்லை என்று சொல்லி தற்போது அவர்கள் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..!

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்