ஆண் நண்பருடன் சேர்ந்து “நா ரெடி தான்” பாடலுக்கு மரண குத்தாட்டம் போட்ட கயல் சைத்ரா ரெட்டி.!

வெளியிட்டது

கயல் சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் நடிகை சைத்ரா ரெட்டி தற்போது தனது நண்பர் அவினாஷுடன் இணைந்து லியோ படத்திலிருந்து வெளியான முதல் சிங்கிள் பாடலான “நா ரெடி தான் வரவா” பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. பெங்களூருவில் பிறந்து வளர்ந்தவர் சைத்ரா ரெட்டி. ஆரம்பத்தில் கன்னட சீரியல்களில் நடித்து வந்த இவருக்கு தமிழில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருந்தது. இதனால் அவர் தமிழில் ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்கிற சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தார். முதல் நாடகமே வில்லியாக நடிக்கிறோம் என்கிற எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தார். இந்த நாடகம் சைத்ராவிற்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து அவருக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கயல் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆண் நண்பருடன் சேர்ந்து "நா ரெடி தான்" பாடலுக்கு மரண குத்தாட்டம் போட்ட கயல் சைத்ரா ரெட்டி.! 1
தற்போது கயல் சீரியலில் ஆலியா மானசாவின் கணவர் சஞ்சீவுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் தற்போது எழிலுக்கும் கயலுக்கும் திருமணம் நடைபெறுமா என்கிற ஆர்வம் மக்களிடையே எழுந்திருக்கிறது. இதனால் கதை மிகவும் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. சைத்ரா சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் நபர். தினமும் ஏதாவது ஒரு வீடியோ வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் .youtube பக்கத்தை ஒன்றை தொடங்கிய அவர் ஆடுவது, பாடுவது, காமெடி வீடியோக்களை எடுப்பது என்று தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார். குறிப்பாக இவர் தன்னுடன் நடித்த நடிகர் அவினாஷுடன் இணைந்து பல ரீல்ஸ் வீடியோக்களை செய்து வந்தார். இடையில் அவினாஷுக்கு காலில் அடிபட்டு அவர் நடக்க முடியாத நிலை இருந்த நிலையில், தற்போது அவர் கால்கள் சரியாகி மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பியிருக்கிறார். எனவே அவருடன் புது வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் சைத்ரா.

சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற லியோ படத்திலிருந்து வெளியான நான் ரெடி தான் வரவா என்கிற பாட்டிற்கு நடனமாடி அதை வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார். பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக இருக்கும் இந்த பாடலுக்கு ரீல்ஸ் செய்யாதவர்களே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு சமூக வலைத்தளங்கள் எங்கும் பிரபலமாக இருக்கிறது. இந்த நிலையில் அந்த பாடலுக்கு சைத்ராவும் அவினாஷும் ரீல்ஸ் செய்து பதிவிட்டு இருப்பது தற்போது இணையத்தில் வைரலாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண.. கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்