கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி தற்போது தனது வீட்டை சுற்றி காண்பித்து ஹோம் டூர் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பெங்களூருவில் பிறந்து வளர்ந்த சைத்ரா ரெட்டி நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தின் காரணமாக ஆரம்பத்தில் சில கன்னட சீரியல் நடிக்கத் தொடங்கினார். சென்னைக்கு வந்த அவர் முதல் முறையாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்ற சீரியலில் நடித்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டள்ளது.

முதல் சீரியலே வில்லியாக எதிர்மறை கதாபாத்திரமாக இருந்த போதிலும் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி பல தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார். தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்த சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் கயல் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மிகவும் நேர்மையான எதற்கும் பயப்படாத ஒரு பெண் கதாபாத்திரத்தில் நடித்து தற்போது அசத்தி வருகிறார் சைத்ரா ரெட்டி.
மேலும் சைத்ராவிற்கு சில படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. 2019 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ராக்கட் என்கிற படத்தின் மூலமாக வெள்ளித்திரையிலும் கால் பதித்தார். பின்னர் தல அஜீத்துடன் இணைந்து வலிமை படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் விஷமக்காரன் என்கிற ஒரு படத்திலும் நடித்திருக்கிறார். தற்போது சில கன்னட படங்களிலும் நடித்து வருகிறார் சைத்ரா. சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் அவர் தற்போது தனது வீட்டை சுற்றி காண்பித்து வீடியோ வெளியிட்டுள்ளார். நீங்களும் அந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video.!
YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O