கயல் சீரியலில் இருந்து விலகும் சைத்ரா ரெட்டி? இதுதான் காரணமா? சைத்ரா ரெட்டி ரோலில் ஆல்யா? ஆல்யாவுக்கு அடிக்கும் ஜாக்பாட்..

வெளியிட்டது

சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் முக்கியமான தொடர்களில் ஒன்றுதான் கயல். மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது இந்த சீரியல். இதில் கதாநாயகியாக நடித்து வருபவர் சைத்ரா ரெட்டி. இவருக்கு பல ரசிகர்கள் உண்டு. இவரை இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியப்பில் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். இவர் செய்யும் சின்ன சின்ன வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ்கள் வைரலாகி வருவது வாடிக்கையான ஒன்றுதான். இந்த நாடகத்தில் இவருக்கு ஜோடியாக நடித்து வருபவர் சோஷியல் மீடியாவை கலக்கி வரும் தம்பதிகளில் ஒருவரான ஆல்யாவின் கணவர் சஞ்சீவ்தான்.

கயல் சீரியலில் இருந்து விலகும் சைத்ரா ரெட்டி? இதுதான் காரணமா? சைத்ரா ரெட்டி ரோலில் ஆல்யா? ஆல்யாவுக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 1

சைத்ரா ரெட்டியின் பூர்வீகம் பெங்களூரு ஆகும். ஆனாலும் நடிக்க வேண்டும் என்ற ஆசையால் சென்னைக்கு வந்து நாடங்களில் நடிக்க ஆரம்பித்தார். தமிழில் “கல்யாணம் முதல் காதல் வரை” என்ற தொடர் மூலம் அறிமுகமாகினார். கயல் தொடருக்கு முன்னதாக சைத்ரா ஜீ தமிழில் ஒளிப்பரப்பான “யாரடி நீ மோகினி” என்ற தொடரில் வில்லியாக நடித்து அசத்தியிருப்பார். விறுவிறுப்பான இந்த தொடருக்கும், சைத்ராவின் நடிப்புக்கும் பல ரசிகர்கள் உண்டு. இதனால்தான் ஜீ தமிழ் சேனலில் இருந்து சன்டிவியில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது என்று சொல்லலாம்.

தனது யதார்த்தமான நடிப்பால் குறுகிய காலத்திலேயே இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அஜீத்துடன் இணைந்து வலிமை படத்தில் நடித்திருப்பார். தற்போது அடுத்து அடுத்து முண்ணனி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் இவர் கயல் சீரியலில் இருந்து விலகி விட்டதாகவும் இவருக்கு பதிலாக சஞ்சீவின் மனைவி ஆல்யா அந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்