பலரும் ஆவலாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த சந்திரமுகி பாகம் 2 ட்ரைலர் இறுதி ட்ரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. முதலில் வெளியான ட்ரைலர் பெரிய வரவேற்பு பெறாத நிலையில் இரண்டாவது ட்ரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 2005 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, வடிவேலு, நயன்தாரா போன்ற பலர் நடிப்பில் உருவாகி இருந்த திரைப்படம் தான் சந்திரமுகி. இந்த திரைப்படம் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் திரைப்படமாக இருந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்த நிலையில் இதன் இரண்டாம் பாகத்தை பி வாசுவே இயக்க ராகவா லாரன்ஸ், கங்கணா ராவத், வடிவேலு, ஸ்ருஷ்டி டாங்கே, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் வேட்டையன் ராஜவாகவும் கங்கனா ரணாவத் சந்திரமுகியாகவும் நடித்து வருகின்றனர். மேலும் பாகம் 1-ல் முருகேசன் கதாபாத்திரத்தில் நடித்த வடிவேலு இரண்டாவது பாகத்திலும் அதே கதாபாத்திரத்தில் தொடர்கிறார். இந்த படம் 2020ஆம் ஆண்டு எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. லைகா ப்ரொடக்ஷன் தயாரிக்கும் இந்த படம் வருகிற விநாயகர் சதுர்த்திக்கு செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி படமும் அதே நாளில் வெளியாக இருப்பதால் பரபரப்பு எழுந்திருக்கிறது. சமீபத்தில் படத்தில் இருந்து “ஸ்வாகதாஞ்சலி” என்கிற பாடலும் “மோருணியே” மற்றும் “தொரி பொரி தோம்தனனா” என்கிற பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
தொடர்ந்து ஆடியோ ஜூக் பாக்ஸ் மற்றும் ட்ரைலரை படக்குழுவினர் வெளியிட்டு இருந்தனர். ஆனால் ட்ரைலர் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைப் பெறவில்லை. எனவே தற்போது படத்தின் இரண்டாவது ட்ரைலரை வெளியிட்டுள்ளனர். நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் ட்ரைலர் வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Sun TV