Categories: சினிமா

சந்திரமுகி 2 திரைப்படம் எப்படி இருக்கிறது? முழு திரைவிமர்சனம் இதோ? Tamilglitz Rating (?/5)

வெளியிட்டது

ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் சந்திரமுகி 2 திரைப்படத்தின் விமர்சனம் குறித்து தற்போது பார்க்கலாம். தொழிலதிபரான சுரேஷ் மேனன், ராதிகா தம்பதியினர் குடும்பத்தில் அடுத்தடுத்து பிரச்சனைகள் உருவாகி வருகிறது. பிரச்சினையை தீர்ப்பதற்காக குடும்பத்தில் உள்ள அனைவரும் குலதெய்வ கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று ஜோதிடர் ஒருவர் கூறுகிறார். பின்னர் குடும்பத்தினர் அனைவரும் சந்திரமுகி இருக்கும் பங்களாவிற்கு செல்கிறார்கள். இவர்களுடன் ராதிகாவின் மகளின் குழந்தைக்கு பாதுகாவலராக இருக்கும் ராகவா லாரன்ஸ் உடன் செய்கிறார். அவரும் அந்த பங்களாவிலேயே தங்குகிறார்.

சந்திரமுகி 2 திரைப்படம் எப்படி இருக்கிறது? முழு திரைவிமர்சனம் இதோ? Tamilglitz Rating (?/5) 1
இந்த நிலையில் குலதெய்வ கோயிலை சுத்தம் செய்ய இரண்டு பேர் வருகிறார்கள். அவர்கள் மர்மமான முறையில் இறந்து விடுகிறார்கள். அதே சமயம் சந்திரமுகியின் ஆத்மா ராதிகாவின் மகளாக இருக்கும் லட்சுமிமேனன் உடலுக்குள் செல்கிறது. தொடர்ந்து அந்த குடும்பத்தில் பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. பங்களாவிலும் அடுத்தடுத்த மர்மமான விஷயங்கள் நடக்கிறது. இறுதியில் சந்திரமுகியின் ஆத்மா லட்சுமிமேனனை விட்டுச் சென்றதா? ராதிகா குடும்பத்தை சந்திரமுகிக என்ன செய்தது? குலதெய்வ கோயிலில் அவர்கள் வழிபாட்டை முடித்தார்களா? என்பது தான் படத்தின் மீதிக் கதை.

ராகவா லாரன்ஸ் வேட்டனாக வீரத்தையும், பாண்டியனாக காமெடியையும் வெளிப்படுத்தி இருக்கிறார். தனக்கே உரிய பாணியில் நடனம், ரொமான்ஸ் காமெடி என அனைத்திலும் ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார். கங்கனா நடனம், பயம் என அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார். லட்சுமிமேனன் சந்திரமுகி தன் உடம்பிற்குள் புகுவதற்கு முன்பு சாந்தமாகவும், ஆத்மா புகுந்தவுடன் ஆக்ரோஷமான நடிப்பையும் வெளிப்படுத்தி அசர வைத்திருக்கிறார்.


பணிக் பெண்ணாக வரும் மஹிமா நம்பியார், துணிச்சிலான பெண்ணாக வரும் சபிக்ஷா, சிருஷ்டி டாங்கே, ராதிகா, சுரேஷ் மேனன் ரவி மரியாதை என நடிகர்கள் அனைவரும் தங்களுக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள். இந்த படத்தை முழுவதும் தாங்கி நிற்கும் ஒரு நபராக வடிவேலு இருக்கிறார். லாரன்ஸ் உடன் இணைந்து வடிவேலு பேசும் காட்சிகள் தியேட்டரில் சிரிப்பு மழையை வர வைத்துள்ளது. முதல் பாகத்தைப் போலவே இரண்டாவது பாகத்தையும் விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் பி.வாசு இயக்கியிருக்கிறார்.

கீரவாணியின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் ஓரளவிற்கு கை கொடுத்திருக்கிறது. ஆர்டி ராஜசேகரின் ஒளிப்பதிவு வண்ணமயமாக அமைந்துள்ளது. அந்தோணியின் படத்தொகுப்பு சிறப்பாக அமைந்துள்ளது. மொத்தத்தில் கமர்சியல் படங்களை விரும்பும் நபராக இருந்தால் குடும்பத்துடன் சென்று ஒருமுறை இந்த படத்தை பார்த்து ரசிக்கலாம். இந்தப் படத்திற்கு TamilGlitz வழங்கும் ரேட்டிங் 2.5/5

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்