சந்திரமுகி படத்தில் வடிவேலுவுக்கு மனைவியாக ஸ்வர்ணா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தற்போது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருக்கும் வைரல் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கிறது. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் சொர்ணாவா இது என்று கேட்கும் அளவிற்கு அவர் உடல் தோற்றத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. 90ஸ் கிட்ஸ்களுக்கு மிகப் பிடித்தமான படமாக இருப்பது சந்திரமுகி. இன்றுவரை இந்த படத்தை பார்த்து பயப்படுபவர்களும் உண்டு. இதில் வடிவேலுவின் காமெடிகள் உச்சபட்சமாக இருக்கும். வடிவேலுவின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை சுவர்ணா. அழகான மனைவியை ரஜினியிடம் இருந்து காப்பாற்றும் வடிவேலுவின் காமெடிகள் சிரிப்பை வரவழைக்கும்.

கேரளாவை சேர்ந்த சுவர்ணா ஆரம்பத்தில் அழகி போட்டிகளில் கலந்து கொண்டார். 1992ம் ஆண்டு நடந்த மிஸ் கேரளா பட்டம் இவருக்கு கிடைத்தது. இதனால் இவருக்கு மலையாளத்தில் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஹீரோயினாக நடிக்க முடியாத போதிலும் பல மலையாள முண்ணனி நடிகர்களின் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். வலுவான கதாபாத்திரங்களில் நடித்ததால் இவர் குறுகிய காலத்திலேயே பிரபலம் ஆனார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் சந்திரமுகி, ரோஜா கூட்டம், திருப்பதி போன்ற படங்களில் நடித்து இருக்கிறார் சுவர்ணா. இதில் சந்திரமுகி படத்தில் வடிவேலுவின் மனைவியாக இவர் நடித்த கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது.
படங்கள் மட்டுமல்லாது பல சீரியல்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக மாயா மச்சிந்தரா சீரியலில் முண்ணனி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார் சுவர்ணா. இவர் தமிழில் இறுதியாக நடித்தப் படம் நீயும் நானும். 2012ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்திற்குப் பின்னர் இவர் பெரிய அளவில் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டு படங்களில் நடிக்காமல் விலகி விட்டார். தற்போது வெளிநாட்டில் தனது கணவர. மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். தற்போது அவரின் சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி இருக்கிறது. படங்களில் நடிக்கும் போது பளபளவென இருந்த சுவர்ணா தற்போது ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போய்விட்டார். உடல் எடை மெலிந்து திறம் மாறியும் காணப்படுகிறார். இந்த புகைப்படங்களை பார்த்த பலரும் இது சந்திரமுகி சுவர்ணா என்று ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.