பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுப்பதற்கு புதிய சட்டங்களை உருவாக்குவதைவிட, சமுதாயத்தின் எண்ணத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என துணை குடியரசு தலைவர் வெங்கையா தெரிவித்துள்ளார்.

டில்லி சிம்பயாசிஸ் சர்வதேச பல்கலைக்கழகத்தின் 16வது மாநாட்டில் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “சமூக தீமைகள் எதிர்க்க சட்டங்கள் தேவைப்படாது. அதனை விட நல்ல நிர்வாக திறனும், அரசாங்க விருப்பமும் தற்போதைய தேவையாகும்.
நாட்டின் இளைஞர்கள் சமூக பாகுபாடுகளையும், அட்டூழியங்களையும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என உறுதி எடுக்க வேண்டும். அதே நேரத்தில் இது போன்ற விவகாரங்களில் மதம், பிராந்தியம், அரசியல் கொண்ட பார்வைகளை திணித்துக்கொள்ள கூடாது.
இது போன்ற சம்பவங்களால் நாட்டிற்கு அவ பெயர்கள் ஏற்படுகின்றன. இது போன்ற செயல்களில் நாம் அரசியலை கலந்துவிடக்கூடாது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.