Manimegalai-ஐ நான் ரொம்ப மிஸ் பண்றேன்..!அவர் இல்லைன்னு வருத்தம் எனக்கு..! Chef Dhamu..!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சிக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்களாக உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் முடிந்து ஐந்து சீசன் தொடங்கி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளதால் தொடர்ச்சியாக ஆதரவுகளை இந்த நிகழ்ச்சிக்கு அளித்து வருகின்றனர்.

Manimegalai-ஐ நான் ரொம்ப மிஸ் பண்றேன்..!அவர் இல்லைன்னு வருத்தம் எனக்கு..! Chef Dhamu..! 1

இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளரா பணியாற்றி வருபவர் மணிமேகலை நிகழ்ச்சியை விட்டு வெளியேறி உள்ளார். அதற்கு காரணம் பிரியங்கா எனவும் அவர் கூறி இருந்தார். பிரியங்கா நிகழ்ச்சியில் தன்னை அதிகம் டாமினேட் செய்வதாகவும் , சீனியர் அங்கர் என நினைத்துக்கொண்டு பேசுவதாகவும் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்களை அடுக்கி இருந்தார் மணிமேகலை.

தற்போது விஜய் டிவி நட்சத்திரங்கள் அனைவரும் மணிமேகலைக்கு எதிராக திரும்பி உள்ளனர். இந்நிலையில் நடுவர் தாமு, மணிமேகலை குறித்து பேசியுள்ளார். அதில் மணிமேகலை நிகழ்ச்சியை விட்டு போனது தங்களது இழப்பு எனவும், அவர் எனக்கு மகள் போன்றவர்,அவரை மிகவும் மிஸ் செய்வதாக கூறி உள்ளார் தாமு.

வெளியிட்டது

புதிய செய்திகள்