Categories: அரசியல்

குடியுரிமை மசோதா: சிதம்பரம் சரமாரி கேள்வி!

மக்களவையில் நிறைவேற்றப்பட்ட தேசிய குடியுரிமை மசோதா மாநிலங்களைவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அவையின் அமர்வில் பங்கேற்ற முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் “தன்னிச்சையான அதிகார போக்கு” என விமர்ச்சித்துள்ளார்.

குடியுரிமை மசோதா: சிதம்பரம் சரமாரி கேள்வி! 1
பா.சிதம்பரம்

தேசிய குடிமக்கள் மசோதா தொடர்பான விவாதத்தை குறித்து பேசும் போது, ஆறு கேள்விகளை முன்வைத்தார். அது பின்வருமாறு,

  • இந்த அரசாங்கம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாட்டு மக்களை மட்டும் ஒருங்கிணைத்து விட்டு மற்ற நாட்டு மக்களை வெளியேற்றுகிறது?
  • இந்துக்கள், சீக்கியர்கள், புத்தர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஆகிய ஆறு மதக் குழுக்களை மட்டும் எதன் அடிப்படையில் அடையாளம் கண்டது இந்த அரசு?. மேலும் முஸ்லீம், ரோஹிங்கியா மற்றும் ஹசாரஸ் போன்றவர்களை ஏன் இணைத்துக்கொள்ளவில்லை.
  • யூதம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் போன்ற மூன்று ஆபிரகாமிய மதங்கள் உள்ளன. ஆனால் கிறிஸ்துவம் இணைக்கப்பட்டு, மற்ற இரண்டும் ஏன் விடுப்படுள்ளது.
  • இலங்கை இந்துக்கள், பூடான் கிருஸ்துவர்கள் ஆகிய இரண்டு வெளிநாட்டு பிரிவினரை ஏன் ஒதுக்கி வைத்துள்ளீர்கள்?
  • மத துன்புறுத்தல்களை மட்டுமே குறிக்கிற இந்த மசோதா, ஏன் அரசியல் துன்புறுத்தல்களை குறித்து கவலைப்படவில்லை?
  • அரசியலமைப்பு சட்டத்தின் 14வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று அடிப்படை கூறுகளை இந்த சட்டம் மீறுகிறதா? சட்டத்தின் முன் சமத்துவம் இருக்க வேண்டும், மக்களின் எந்தவொரு வகைப்பாடும் நியாயமற்றதாக இருக்கக்கூடாது, ஒரு வகைப்பாடு நியாயமானதாக இருந்தாலும், அது தன்னிச்சையாக இருக்கக்கூடாது.

    இந்த சட்டத்தின் மூலம் நாம் அரசியலமைப்பை உள்ளிருந்தே அழிக்கிறோம். ஆனால் அரசாங்கத்தின் நம்பிக்கையாக மூன்று தூண்கள் இருக்கின்றன. அதில் நீதித்துறை இந்திய மக்களின் நம்பிக்கையை தாங்கி நிற்கும் என நம்புவதாக தெரிவித்தார்.
விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்