Categories: அரசியல்

மூன்று கேள்விகளுக்கு மோடி பதில் அளிப்பாரா? சிதம்பரம் கேள்வி

டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக மூன்று குறிப்பிட்ட விடயங்களை பற்றி மோடி பேசுவாரா முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மூன்று கேள்விகளுக்கு மோடி பதில் அளிப்பாரா? சிதம்பரம் கேள்வி 1
முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம்

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ள நிலையிலும், 2020 -21- ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தில்லி பேரவைத் தேர்தலுக்கு முன்பாக 3 விவகாரங்கள் குறித்து பேச வேண்டும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பா.சிதம்பரம் மூன்று முக்கியமான விஷயங்களை குறிப்பிட்டார்.

1. 2019 ஜன.,யில் 2 சதவீதமாக உயர்ந்த விலைவாசி, 2019 டிசம்பரில் 7.35 சதவீதம் உயர்ந்துள்ளது.
2. வரி வருவாய் 2019-20 ம் ஆண்டின் பட்ஜெட்டிற்காக ஒதுக்கப்படும் தொகையான ரூ.2.5 லட்சம் கோடியை விட சரியும்.
3. எஸ்சி, எஸ்டி, ஓபிசி, சிறுபான்மையினர் மற்றம் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான திட்டங்களுக்கான செலவு குறைவுக்கப்பட உள்ளது.

மக்கள் பொருளாதாரத்தை பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்.துஷ்பிரயோகம் மற்றும் பேச்சுதிறமை பற்றி அல்ல. ஆட்சிக்கு வந்து 6 ஆண்டுகள் ஆன பிறகும் நல்ல காலம் வராதது ஏன் என மக்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள் என கூறியுள்ளார்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்