விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் வில்லியாக நடித்து வந்த வி.ஜே அர்ச்சனா தற்போது வைரமுத்துவை சந்தித்திருக்கிறார். அந்த புகைப்படத்தை அவர் தனது instagram-ல் பதிவிட்ட போது அந்த புகைப்படத்திற்கு கீழே சின்மயி சில கருத்துக்களை கமெண்ட்டாக பதிவிட்டு இருக்கிறார். அந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு தெய்வம் தந்த பூவே என்கிற பாடல் மூலமாக தமிழ் ரசிகர்களிடையே மிகப் பிரபலமானவர் பாடகி சின்மயி. அதற்குப் பிறகு இவர் பல மெலடி பாடல்களை பாடி இருக்கிறார். தன்னுடைய மெல்லிய குரலால் பல ரசிகர்களை கவர்ந்திருந்தார். இவருக்கும் வைரமுத்துவருக்கும் நடந்த சண்டை நாம் அனைவருக்கும் அறிந்ததே. வைரமுத்து தன்னை வெளிநாட்டில் இசை நிகழ்ச்சிக்காக சென்றிருந்தபோது அறையில் வைத்து தவறாக நடந்து கொண்டார் என்கிற மிகப் பெரிய குற்றச்சாட்டை வைத்தார் சின்மயி.

தொடர்ந்து பெண்களிடம் யாரேனும் தவறாக நடந்து கொண்டாலோ, இல்லை அது குறித்த செய்தி வந்தாலோ, வைரமுத்துவை மேற்கோள் காட்டி ட்வீட் செய்வதையும், வைரமுத்துவை தாக்கி பேசுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இன்று விஜய் டிவியில் ராஜா ராணி சீரியலில் வில்லியாக நடித்து வந்த விஜே அர்ச்சனா வைரமுத்துவை சந்தித்திருக்கிறார். அந்த புகைப்படத்தை அவர் instagram-ல் பகிர்ந்து இருந்தார். அந்த புகைப்படம் ஒன்றில் வைரமுத்து அர்ச்சனாவின் தலையில் கை வைத்து ஆசீர்வதிப்பது போலவும் இருந்தது. இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும் நெகட்டிவாக கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த நிலையில் சின்மயியும் அந்த புகைப்படத்திற்கு கீழே கமெண்ட் ஒன்றை பதிவு செய்து இருக்கிறார். அதில் வைரமுத்துவை தாக்கியும் அர்ச்சனாவிற்கு அறிவுரை செய்தும் அவர் ஒரு கமெண்டை போட்டு இருக்கிறார்.
தயவு செய்து அவரிடம் கவனமாக இருங்கள். இது இப்படித்தான் ஆரம்பமாகும். அவரிடம் இருந்து சற்று தள்ளியே இருங்கள். யாரும் உங்களுடன் இல்லாமல் அவரை சென்று சந்திக்காதீர்கள், உடன் யாரையாவது வைத்துக் கொள்ளுங்கள் என்று அவர் பதிவிட்டு இருக்கிறார். இந்த கமெண்ட் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வந்தது. இந்த கமெண்ட்டை அர்ச்சனா டெலிட் செய்து இருந்தார். ஆனாலும் அந்த பலரும் ஸ்கிரீன்ஷாட் எடுத்து இணையத்தில் பரவ விட்டு வருகின்றனர். வைரமுத்துவிற்கும் சின்மயிக்கும் இடையே ஒரு பனிப்போரே நடந்து வருகிறது. அது இன்னமும் முடிந்த பாடில்லை. தொடர்ந்து இது போன்ற தர்ம சங்கடமான நிகழ்வுகளும் நடந்து வருகிறது. சின்மயி போட்ட அந்த கமெண்டிற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.