Categories: வைரல்

இந்த இரண்டு பேர் தெரு நாயை விட மோசமானவங்க..யாரை சொல்கிறார் சின்மயி | Chinmayi

வெளியிட்டது

தமிழ் திரைப்படத்தின் பிரபல பிண்ணனி பாடகியாக இருப்பவர் சின்மயி. தனது மெல்லிய குரலால் பல ரசிகர்களை ஈர்த்தார். இவரின் முதல் பாடலே கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஒரு தெய்வம் தந்த பூவே பாடல் தான். முதல் பாடலே வேறு லெவலில் ஹிட் அடிக்க, பல படங்களில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. பின்னாளில் இவர் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்தார். ஆனால் வைரமுத்து இதை மறுத்தார். இதனால் சின்மயி தரப்புக்கும், வைரமுத்து இடையே சண்டை நீடித்து வந்து கொண்டே இருந்தது. மீ டூ என்ற வார்த்தையும் பிரபலமானது. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்களுக்கு ஆதரவாகவும் சின்மயி குரல் கொடுத்து வருகிறார்.

மேலும் பெண்கள் குறித்து குற்றச்சாட்டுகள், அல்லது செய்திகள் வந்தாலும் வைரமுத்துவை மறைமுகமாக தாக்கி வருகிறார் சின்மயி. அப்படி ஒரு சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஆண்களை தெருநாயுடன் ஒப்பிட்டு பெண் ஒருவர் பேச, அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரியாணி மேன் ஒரு வீடியோ ஒன்றைப் போட்டுள்ளார். அதில் அவர் கொஞ்சம் அசிங்கமாகவே பதில் அளித்து இருந்தார். இந்த காணொலியை பகிர்ந்த சோனியா என்ற பத்திரிக்கையாளர், “பிரியாணி மேன் சைக்கோ இன்னும் திருந்தலையா? ஏற்கனவே பாத்ரூம் டூருக்காக அர்ச்சனாவை அப்யூஸ் பண்ணான், இப்ப இப்படி ஒரு வீடியோ போட்டு இருக்கான், இவன் திருந்தாத ஜென்மம்” என்று குறிப்பிட்டு சின்மயியை டேக் செய்து இருந்தார்.

இந்த வீடியோவை பார்த்த சின்மயி மறைமுகமாக வைரமுத்துவை தாக்கி பேசியிருந்தார். பிரியாணி மேன் பெண்களை தெருநாய் என்று சொன்னதற்கு கொதிக்கிறீர்களே, அந்த பெண் ஆண்களை தெரு நாய் என்று சொன்னதற்கு என்ன சொல்ல போகிறீர்கள் என்று கேட்டதற்கு சின்மயி “என்னை பொறுத்தவரை ராதா ரவி மற்றும் தமிழ் புலவர் இருக்கும் அறையில் இருப்பதை விட, ஒரு தெருநாய் இருக்கும் அறையில் நான் பாதுகாப்பாக இருப்பேன்” என்று சின்மயி பதில் அளித்துள்ளார்.

இந்த இரண்டு பேர் தெரு நாயை விட மோசமானவங்க..யாரை சொல்கிறார் சின்மயி | Chinmayi 1

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்