“அப்படி தான் பேசுவேன், பிடிக்கலானா கிளம்புங்க”!!”ட்விட்டர் நெட்டிசனை போட்டு புரட்ட எடுத்த சின்மயி”!!”அதுக்குனு இவளோ கேவலமா கேள்வி கேட்ட கோவம் வர தான் செய்யும்”!!

வெளியிட்டது

பாடகி சின்மயி எப்போதும் சொக்காயில் மீடியா தளங்களில் மிகவும் அசிடிவாக இருப்பவர். சமீபத்தில் இவருக்கு குழந்தை பிறந்ததை இவர் இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்தது முதலே பலரும் மிக கேவலமாக பேச துவங்கியுள்ளனர். அவருடைய கற்பம் முதல் குழந்தைகளுக்கு பெயர் வைத்தது வரை, அப்படி என்ன தான் அவரின் மேல் மக்களுக்கு கோபமோ தெரியவில்லை, பெண் என்றும் பார்க்காமல் மிரோக தரக்குறைவாக பதிவுகளை பதிவிட்டு வருகிறார்கள்.

"அப்படி தான் பேசுவேன், பிடிக்கலானா கிளம்புங்க"!!"ட்விட்டர் நெட்டிசனை போட்டு புரட்ட எடுத்த சின்மயி"!!"அதுக்குனு இவளோ கேவலமா கேள்வி கேட்ட கோவம் வர தான் செய்யும்"!! 1

பிரபல பின்னணி பாடகி சின்மயி திரைப்படங்களில் பாடகியாகவும், பின்னணியில் நாயகிக்கு குரல் கொடுப்பவராகவும் இருந்து வருகிறார். இசைஅமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானால் “கன்னத்தில் முத்தமிட்டால்” படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இவர் பின் தமிழ் தெலுகு ஹிந்தி என பல மொழிகளிலும் பாடியுள்ளார். மேலும் பல நடிகைகளுக்கு குரல் கொடுக்கவும் பல படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். இவர் 2014ஆம் ஆண்டு ராகுல் என்ற நடிகரை திருமணம் செய்து கொண்டார்.

கடந்த சில ஆண்டுகள் முன்பு வந்து பிரளயத்தை கிளப்பிய #MeToo விவகாரத்தில் தைரியமாக குரல் எழுப்பியவர் இவர். இந்நிலையில் திருமணமாகி 8 ஆண்டுகள் கழித்து இவர்களுக்கு 2 குழந்தைகள் அண்மையில் பிறந்துள்ளது. அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருந்தார் சின்மயி. பலரும் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். ஒரு சிலர் சின்மயியை கேலி செய்தும் வருகின்றனர். அதற்கு சின்மயியும் பதிலடி கொடுத்து வருகிறார். ரசிகர் ஒருவர் “2 குழந்தைகளையும் வைரம் மற்றும் முத்து போல பார்த்து கொள்ளுங்க” என்று பதிவிட்டுள்ளார். இதற்க்கு பதில் அளித்த சின்மயி ‘உன்னல்லாம் பெத்தாங்க பாரு அவங்கள சொல்லணும்’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.

இவர் #MeToo விவகாரத்தில் பாடலாசிரியர் வைரமுத்து மீது அடுக்கடுக்க குற்றஞ்சாட்டுகளை வைத்தார்.அதனை குறிப்பிட்டு இவ்வாறு தரம் தாழ்ந்து பதிவிட்டு வருகிறார்கள் சிலர்.மேலும், இந்த கமண்ட் குறித்து மேலும் பதிவிட்டுள்ள சின்மயி “எனக்கு குழந்தை பிறந்ததை அறிவித்து இருந்ததில் இருந்தே பல தமிழ் நெட்டிசன்கள் நான் மீ டூவின் குறிப்பிட்ட அந்த சில்மிஷவாதியை போல தான் என் குழந்தையும் செய்யும் என்று கூறி வருகின்றனர். இந்தியாவில் இருக்கும் இந்த மாநிலம் தான் முன்னேற்றத்தை பற்றியும், பெண்ணியம் பற்றியும் அதிகமாக பேசும் மாநிலம். இதனால் தான் நான் கர்ப்பமாக இருந்ததை பற்றி சமூக வலைதளத்தில் பேசவே இல்லை. இந்த சாக்கடை குப்பைகள் தான் தமிழ் நாட்டில் அதிலும் குறிப்பாக சமூகவலைதளத்தில் தான் அதிகம் குறைக்கும் கூட்டங்கள்.இது போன்ற நபர்களுக்கு மத்தியில் தான் நம் குழந்தை இருக்கிறது எனவே எச்சரிக்கையாகவும், ஜாக்கிரதையாகவும் இருங்கள்” என பதிவிட்டு இருந்தார்.

 

சின்மயின் இந்த பதிவை பார்த்த சமூகவலைதளவாசி ஒருவர் “ட்விட்டரில் வரும் கமெண்டுகளை வைத்து ஒரு ஒட்டு மொத்த மாநிலத்தையும் இப்படி சொல்லிவிடுவீர்களா?” என்று கமெண்ட் செய்தார். இதற்கு சின்மயி “ஆமா, அப்படி தான் பேசுவேன், பிடிக்காலான கிளம்புங்க” என்று கடுப்புடன் கூறியுள்ளார். இந்த ட்வீட் இப்பொது வைரலாகி வருகிறது,

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்