Categories: சினிமா

பலரை ரிப்போர்ட் அடித்த சின்மயி..சின்மயிக்கு எதிராக இன்ஸ்டாகிராம் செய்த செயல்.. பரிதவிக்கும் சின்மயி

வெளியிட்டது

சமீபத்தில் இரட்டை குழந்தைகளுக்கு தாயான செய்தியை இணையத்தில் பகிர்ந்து இருந்தார் பிரபல பிண்ணனி பாடகி சின்மயி. இந்த செய்தியை கேட்ட பலரும் சின்மயிக்கு வாழ்த்துக்களை கூறி வந்த நிலையில் பலரும் இன்ஸ்டாகிராமில் சின்மயிடம் சென்று நீங்கள் வாடகைத் தாய் முறையில் தானே குழந்தை பெற்றுக் கொண்டீர்கள் என்று கேட்டு தொந்தரவு செய்தனர். இதனால் மனமுடைந்த சின்மயி, நான் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என்று தெளிவாக ஒரு விளக்கமும் கொடுத்து விட்டார். ஆனாலும் சின்மயி குழந்தை பெற்றது பற்றி பலர் தவறான கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். பலர் ஒரு படி மேலே போய் இன்ஸ்டாகிராமில் தவறான வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை சின்மயிக்கு அனுப்பியுள்ளனர்.

பலரை ரிப்போர்ட் அடித்த சின்மயி..சின்மயிக்கு எதிராக இன்ஸ்டாகிராம் செய்த செயல்.. பரிதவிக்கும் சின்மயி 1

இதனால் கடுப்பான சின்மயி, தனக்கு இது போல் மெசேஜ் அனுப்பும் நபர்களை ரிப்போர்ட் செய்துள்ளார். அதிகமாக சின்மயி ரிப்போர்ட் செய்து வருவதால் சின்மயி இன்ஸ்டாகிராம் கணக்கையே நீக்கியுள்ளது இன்ஸ்டாகிராம் நிறுவனம்.
இந்த செயலை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள சின்மயி, அசிங்கமான, தவறான போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் அனுப்பும் ஆண்களை ரிப்போர்ட் செய்தால் அவர்களை விட்டுவிட்டு ரிப்போர்ட் செய்த பெண்ணின் கணக்கை முடக்கியுள்ளது இன்ஸ்டாகிராம், அமேசிங் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் சிலர் குழந்தை பிறந்த செய்தியை சொன்னபோது, சில தமிழ் நெட்டிசன்கள், மீ டூ வின் போது நான் ஒருவரின் பெரை குறிப்பிட்டு இருந்தேன், அந்த பெயரைப் பயன்படுத்தி என் குழந்தைகளை வாழ்த்தியிருந்தார்கள், முற்போக்கு, பெண்ணியம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் பற்றி பேசும் இந்தியாவில் மாநிலம் இது என்றும் அவர் ட்வீட் செய்துள்ளார்.

நான் கர்ப்பம் குறித்து சமூக வலைதளங்களில் பேசாததற்கு இதுதான் காரணம். தமிழ்நாட்டில் குறிப்பாக சமூக ஊடகங்களில் இந்த சாக்கடை குப்பைகள்தான் உரத்த குரலில் கத்திக் கொண்டு உள்ளார்கள். நம் குழந்தைகள் அத்தகைய நபர்களைச் சுற்றி இருப்பார்கள். கவனமாக இருங்கள்.இங்கு பெண்களின் பாதுகாப்பு என்பது கேலிக்கூத்தாக உள்ளது என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்