“40 வயசு பாட்டியாகப்போற உங்களுக்கு IVF தான் உதவணும்”!!நயன்தாராவை கொச்சையாக பேசிய டாக்டரை வெளுத்து வாங்கிய சின்மயி!!

வெளியிட்டது

"40 வயசு பாட்டியாகப்போற உங்களுக்கு IVF தான் உதவணும்"!!நயன்தாராவை கொச்சையாக பேசிய டாக்டரை வெளுத்து வாங்கிய சின்மயி!! 1

கடந்த ஒரு வாரமாக கோலிவுட்டின் ஒரு பேச்சு நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனின் திருமணம் செய்தியே. 7 ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த ஜூன் 9ஆம் தேதி மிகவும் பிரமாண்டமாக சென்னையை அடுத்த மஹாபலிபுரத்திலுள்ள தனியார் ரெசார்ட்டில் திருமணம் செய்து கொண்டனர். நெருங்கிய உறவினர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் மட்டுமே பங்கேற்ற இந்த நிகழ்வு தான் 5 நாட்களாக ட்ரெண்டிங் நியூஸ். நடிகர்கள் ரஜினிகாந்த், கார்த்தி, ஷாருக் கான், வசந்த்ரவி, விஜய் சேதுபதி,திலீப்,  இயக்குனர் மணிரத்னம், அட்லீ, கௌதம் வாசுதேவ் மேனன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடன இயக்குனர் பிருந்தா, தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, தயாரிப்பாளர் போனி கபூர் என பலர் கலந்து கொண்டு மணமக்களை நேரில் வாழ்த்தினர்.

திருமண முடிந்த கையோடு திருப்பதி சென்ற இருவரும் அங்கு சாமி தரிசனம் செய்து வெளியே வந்து போட்டோஷூட் எடுத்த போது காலணிகளுக்கு தடைசெய்யப்பட்ட இடத்தில செருப்புடன் அலைந்ததால் மிகவும் விமர்சிக்கப்பட்டார்கள். இயக்குனர் விக்னேஷ் சிவன் மன்னிப்பு கடிதம் எழுதியும், உங்கள் மேல் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தான போர்டு தெரிவித்துள்ளது. திருமணத்தின் போது ரிசார்ட் பின்புறத்தில் இருந்து கடற்கரைக்கு வாக்கிங் சென்ற போது மக்கள் தடுத்து நிறுத்தப்பட்டது என இன்னும்  இவர்களுடைய சர்ச்சைகள் அடங்கிறவில்லை.

அதுக்குள்ளாக மற்றொரு சர்ச்சை இவர்களுடைய திருமணம் குறித்து ட்விட்டர் தளத்தில் காரசாரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இப்பொது திருமணம் செய்து கொண்டுள்ள நயன்தாராவிற்கு 37 வயது, விக்னேஷிற்கு 36 வயது. இதனை வைத்து அந்த சமூகவலைத்தளத்தில் சர்ச்சை பேச்சுகள் எழுந்துள்ளன. ட்விட்டர் பயனாளி ஒருவர் தன்னுடைய பக்கத்தில்,  “ஒரு நடிகையாக நான் நயன்தாராவை மதிக்கிறேன், ஆனால் 40 வயதை நெருங்கும் உங்களுக்கு இப்பொது திருமணம், குழந்தை ஆசைகள் தேவைதானா?…நினைத்தாலே பாவமாக இருக்கிறது..உங்களுக்கு IVF  முறை தான் உதவ வேண்டும்” என கொஞ்ச நக்கலாக அவர்களுடைய திருமணத்தை கொச்சை படுத்தும் வகையில் பதிவிட்டுருக்கிறார்.

இந்த பதிவு கொஞ்ச நேரத்தில் வைரலாக பகிரப்பட்டது. சிலர் இவருடைய பேச்சிற்கு நக்கலாக தாங்களும் ஆதரவு தெரிவித்தும், சிலர் இதனை கடுமையாக எதிர்த்தும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இப்பொது இந்த கருத்துக்கு பின்னணி பாடகி சின்மயி பகிரங்க கண்டனம் தெரிவித்துள்ளார். “கன்னத்தில் முத்தமிட்டால்” படத்தில் இடம்பெறும் “ஒரு தெய்வம் தந்த பூவே” பாடலுக்காக தேசிய விருது வென்றுள்ள சின்மயி பெரும்பாலும் நடிகை சமந்தாவின் குரலாக திரையில் ஒலிக்கிறார்.

இந்த பதிவை பார்த்துள்ளார் அவர் பதிவிட்ட அந்த நபரின் அக்கவுண்டை கண்டுபிடித்து, உண்மையில் ஒரு டாக்டரான அவரது பதிவிற்கு கண்டனம் தெரிவித்து, “நாம் மருத்துவ கல்லூரிகளில் பாலினங்களை பற்றி பேசி வருகிறோம், சமூகவலைத்தளங்களில் எவ்வாறாக பெண் மருத்துவருக்கு புறக்கணிப்படுகிறார்கள் என்பதெல்லாம் பேசுபவர்களிடம் இந்த பதிவை அனுப்ப விரும்புகிறேன், ஒரு நடிகை திருமணம் செய்து கொள்கிறார், உடனே இந்த முட்டாள் மருத்துவர் இவ்வாறான குப்பையான பதிவை பகிர்கிறார்” என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், அவருடைய ப்ரொபைலை பகிர்ந்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த ட்விட்டர் பதிவு இப்பொது சமூகவலைதளவாசிகளால் பகிரப்பட்டு வருகிறது. ஒரு பெண் 37 வயதில் திருமண செய்து கொள்ளும் விஷயத்தை ஒரு மருத்துவர் இவ்வாறு இழிவாக பேசியிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியதாகும்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்