“நான் கர்ப்பமா இருந்தத கூடவே உங்களுக்கு சொல்லணும்”!!”அது என்னோட பர்சனல்”!! குழந்தை பெற்றததை குறித்து கேள்வி எழுப்பியவர்களுக்கு பளார் பதிலடி கொடுத்துள்ள சின்மயி!!

வெளியிட்டது

"நான் கர்ப்பமா இருந்தத கூடவே உங்களுக்கு சொல்லணும்"!!"அது என்னோட பர்சனல்"!! குழந்தை பெற்றததை குறித்து கேள்வி எழுப்பியவர்களுக்கு பளார் பதிலடி கொடுத்துள்ள சின்மயி!! 1

சின்மயி தமிழ் மட்டுமின்றி இந்தியாவிலுள்ள பல மொழி படங்களிலும் மிக பெரிய வெற்றியை கொடுத்த பாடல்களை பாடியுள்ளார். ரேடியோ ஜாக்கியாக தன்னுடைய மீடியா வாழ்க்கையை துவங்கி பின்னர் தொகுப்பாளராக, இப்பொது பின்னணி பாடகராக மிகவும் பிரபலமாக உள்ளார். தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்ட இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, பெங்காலி, ஹிந்தி, இங்கிலிஷ், மராத்தி மற்றும் ஜெர்மன் மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர். 2002ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மாதவன், சிம்ரன் நடிப்பில் வெளியான “கன்னத்தில் முத்தமிட்டால்” படத்தில் பாடகராக அறிமுகமானார்.

“கன்னத்தில் முத்தமிட்டால்” படத்தில் இடம்பெறும் “ஒரு தெய்வம் தந்த பூவே” பாடலுக்காக அவர் தேசிய விருதும் வென்றுள்ளார். சின்மயி இதுவரை தமிழில் மட்டுமே 100 மேலான பாடல்களை பாடியுள்ளார்.பாடல்கள் பாடுவது மட்டுமின்றி இவர், நிறைய நாயகிகளுக்கு படங்களில் பின்னணியில் குரல் கொடுத்து வருகிறார். “ஜில்லுனு ஒரு காதல்” படத்தில் நடிகை பூமிகாவிற்கு முதல் முறையாக குரல் கொடுத்தார். நடிகர் ராகுல் ரவீந்திரனை இவர் 2014ஆம் ஆண்டு திருமமணம் செய்து கொண்டார்.

நடிகை சமந்தாவின் நெருங்கியாக நண்பராக இருக்கும் சின்மயி அவருக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் மிக முக்கிய உறுதுணையாகவும், பெரும்பாலான படங்களில் நாம் கேட்கும் சமந்தாவின் குரலாகவும் ஒலித்து வருகிறார். குறிப்பாக சமந்தா தன்னுடைய விவகாரத்தை அறிவித்த போது, அந்த இக்கட்டான சூழ்நிலையில் சமந்தாவிற்கு உறுதுணையாக இன்று அவரை தேற்றியவர் சின்மயி.

சில நாட்கள் முன்பு ட்விட்டர் பயனாளி ஒருவர் தன்னுடைய பக்கத்தில்,  “ஒரு நடிகையாக நான் நயன்தாராவை மதிக்கிறேன், ஆனால் 40 வயதை நெருங்கும் உங்களுக்கு இப்பொது திருமணம், குழந்தை ஆசைகள் தேவைதானா?…நினைத்தாலே பாவமாக இருக்கிறது..உங்களுக்கு IVF  முறை தான் உதவ வேண்டும்” என கொஞ்ச நக்கலாக அவர்களுடைய திருமணத்தை கொச்சை படுத்தும் வகையில் பதிவிட்டுருக்கிறார்.

இந்த பதிவை பார்த்துள்ளார் அவர் பதிவிட்ட அந்த நபரின் அக்கவுண்டை கண்டுபிடித்து, உண்மையில் ஒரு டாக்டரான அவரது பதிவிற்கு கண்டனம் தெரிவித்து, “நாம் மருத்துவ கல்லூரிகளில் பாலினங்களை பற்றி பேசி வருகிறோம், சமூகவலைத்தளங்களில் எவ்வாறாக பெண் மருத்துவருக்கு புறக்கணிப்படுகிறார்கள் என்பதெல்லாம் பேசுபவர்களிடம் இந்த பதிவை அனுப்ப விரும்புகிறேன், ஒரு நடிகை திருமணம் செய்து கொள்கிறார், உடனே இந்த முட்டாள் மருத்துவர் இவ்வாறான குப்பையான பதிவை பகிர்கிறார்” என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், அவருடைய ப்ரொபைலை பகிர்ந்து கண்டனம் தெரிவித்து இருந்தார்.

அந்த சர்ச்சை சற்று தணிந்த நிலையில் நேற்று பாடகி சின்மயிக்கு இரட்டை குழந்தைகளை பிறந்துள்ளது. இதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அவர், திரிபாத் மற்றும் ஷர்வஸ் எங்கள் குடும்பத்தின் புது வரவு என கூறி, இன்ஸ்டகிராம் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். இது சில நேரங்களிலேயே மிகவும் வைரல் ஆனது. ரசிகர்கள் பலரும் பாடகி சின்மயிக்கும், நடிகர் ராகுல் ரவீந்திரனுக்கும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துவந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் பலரும் நீங்கள் பார்ப்பதற்கு கர்ப்பமாக இருந்தது போலவே தெரியவில்லையே, எப்படி குழந்தை பிறந்தது, வாடகை தாய் மூலம் என பல்வேறு வகையிலான கேள்வி பாடகி சின்மயி முன் வைத்து வந்தனர். இதற்கு அவர் அது என்னுடைய தனிப்பட்ட விஷயம், என தனிப்பட்ட வாழ்க்கை பற்றி நான் எப்போதும் கவனமாக இருக்கிறேன், போது வெளியில் கூற வேண்டிய அவசியம் இல்லை எனவும், மேலும் நான் சாஸேரியன் செய்த போதே ஒரு பாடலை பாடியிருக்குறேன்” என பதிவிட்டுள்ளார்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்