Categories: சினிமா

வீட்டில் வேலை செய்பவரின் மகன் திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்த சீயான் விக்ரம்

வெளியிட்டது

தமிழின் முன்னணி நாயகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விக்ரம். இவர் தற்போது தனது வீட்டில் 40 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த ஒருவரின் மகனின் திருமணத்திற்காக சென்றுள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக இருக்கிறது. தமிழில் ஹாலிவுட் படங்களின் நடிக்கும் நடிகர்களுக்கு இணையாக இருப்பவர்கள் இரண்டு பேர் ஒன்று கமலஹாசன், இன்னொருவர் விக்ரம். இருவருமே நடிப்பிற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்கள். அதேபோல் படத்திற்காக உடல் எடையை வெகுவாக இளைப்பதும், உடல் எடையை வேகமாக ஏற்றுவதும் இவர்கள் இருவருக்கும் கைவந்த கலை. அந்த அளவிற்கு அர்ப்பணிப்பு உணர்வோடு படங்களில் நடித்து வருபவர்கள். இவர்கள் இருவரில் இதில் சீயான் விக்ரம் சற்று வித்தியாசமானவர்.

வீட்டில் வேலை செய்பவரின் மகன் திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்த சீயான் விக்ரம் 1

விக்ரம் 1990 ஆம் ஆண்டு வெளியான ‘என் காதல் கண்மணி’ என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார். இவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் என்று சொன்னால் அது சேதுதான். இந்த படத்தில் இவர் சீயான் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதுவே அவருடைய பட்டப்பெயரும் ஆகிப் போனது. அவரை அவரது ரசிகர்கள் செல்லமாக சீயான் என்றே அழைக்க தொடங்கினர். சியான் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் கோப்ரா. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் விக்ரம்.

இவர் நடிப்பில் வரும் முப்பதாம் தேதி வெளியாக உள்ள படம் பொன்னியின் செல்வன். வரலாற்று காவியமான இதில் முக்கிய கதாபாத்திரமான ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விக்ரம். இதற்காக அவர் தொடர்ந்து 10 மணி நேரம் குதிரையில் அமர்ந்து கடுமையான உழைப்பை கொடுத்திருக்கிறார்.

ரசிகர்களுக்கு தனக்கும் நல்ல ஒரு நட்புறவை கொண்டு இருக்கிறார் நடிகர் விக்ரம். இவர் தற்போது தனது வீட்டில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பணிந்து புரிந்து வரும் மேரி என்பவரின் மகனின் திருமணத்திற்காக திருப்போரூரில் உள்ள முருகன் கோவிலுக்கு வந்துள்ளார். பட்டு வேட்டி, பட்டு சட்டையில் வந்த அவர், மணமக்களுக்கு தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது. தனது வீட்டில் 40 ஆண்டுகளாக வேலை பார்க்கும் ஒருவருக்காக சீயான் விக்ரம் நேரடியாக வந்து திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்தியிருப்பது சீயான் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்