தமிழ் திரையுலகில் 90களில் முன்னணி நாயகனாக இருந்தவர் நடிகர் விக்ரம். இவர் தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். பொன்னியின் செல்வனில் ஆதித்த கரிகாலன் ரோலில் கூட நடித்துள்ளார். பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் ரோலில் நடிப்பதற்காக அவர் 10 மணி நேரம் தொடர்ந்து குதிரையில் உட்கார்ந்து ப்ராக்டிஸ் செய்ததாக நிழல்கள் ரவி கூறியஇருந்தனர்.. தற்போது இவர் நடித்து வரும் படம் கோப்ரா படத்தில் அதிகபட்சமாக 20 கெட்டப்புகள் போட்டு நடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தசாவதாரம் படத்தில் உலக நாயகன் கமல் கூட பத்து வேடங்களில் தான் நடித்தார். ஆனால் அவரை மிஞ்சும் அளவிற்கு 20 கெட்டபுகள் போட்டு நடித்துள்ளார் விக்ரம். இதைத்தொடர்ந்து “நட்சத்திரம் நகர்கிறது” என்ற படத்தில் நடித்து வருகிறார். பின்னர் மாரி செல்வராஜ் இயக்கும் படத்திலும், பா ரஞ்சித் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு விக்ரமிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது அதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல்கள் பரவி இருந்தன. ஆனால் விக்ரமின் மகன் துருவ் விக்ரம், மாரடைப்பெல்லாம் ஏதுமில்லை, காய்ச்சல்தான் விரைவில் வீடு திரும்புவார் என்று விளக்கம் அளித்து இருந்தார்்மேலும் அவர் விக்ரம் உடல்நிலை குறித்து வதந்திகள் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த நிலையில் பொன்னியின் செல்வனின் டீசர் வெளியானது அப்போது விக்ரம் கலந்து கொள்வாரா இல்லையா? என்ற குழப்பம் நீடித்தது. ஆனால் அவர் மருத்துவமனையில் இருந்ததால் பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை.
எனவே இன்று நடந்த கோபுர ஆடியோ வெளியீட்டு விழாவிலும் பங்கேற்பாரா இல்லையா? என்று சந்தேகத்துடனே ரசிகர்கள் இருந்தனர் சென்னை பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் நடந்த கோப்ரா ஆடியோ விழாவில் விக்ரம் நிச்சயம் கலந்து கொள்வார் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் மாலை தொடங்கிய கோப்ரா ஆடியோ விழாவில் உதயநிதி ஏ ஆர் ரகுமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விக்ரம் மாஸாக அரங்கிற்குள் என்ட்ரி கொடுத்த போது அரங்கம் அதிரும் வகையில் ரசிகர்கள் கூச்சலுடன் கைத்தட்டி அவரை வரவேற்றனர். ஆரோக்கியமாகவும் மிக சந்தோஷமாகவும் அரங்கிற்குள் நுழைந்த அவரை ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். அவரும் கையசைத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஆக்சன் திரில்லர் படமாக கோப்ரா படம் வெளியாக உள்ளது இதை 7 கிரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ளது இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் வில்லனாக நடிக்கிறார் இவர்களுடன் மியா ஜார்ஜ் கேஜிஎப் கதாநாயகி ஸ்ரீநிதி செட்டி ஆகியோர் நடித்துள்ளனர் இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். அங்கு பேசிய அவர் எனக்கு ஹார்ட் அட்டாக் என்று யாருடைய புகைப்படத்தையோ போட்டு நன்றாக எடிட் பண்ணி உள்ளனர் என்று நக்கலாக கூறினார்.