Categories: சினிமா

யாரும் பயப்புடாதீங்க, நிஜமாவே நான் தான்..ட்விட்டரில் என்ட்ரி கொடுத்து சீயான் வெளியிட்ட வீடியோ

வெளியிட்டது

நடிகர் விக்ரம் நேற்று ட்விட்டரில் இணைந்துள்ள நிலையில் அவர் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் இருப்பவர் நடிகர் விக்ரம். இவர் ஹாலிவுட் படங்களில் வரும் நடிகர்களைப் போல, படத்திற்கு தேவை என்றால் உடலை மிக இளைப்பதும், இல்லை என்றால் உடலை கட்டுக்கோப்பாக மாற்றுவதும் இவருக்கு கைவந்த கலை. ஹாலிவுட் நடிகர்களுக்கு நிகராக இருக்கும் தமிழ் நடிகர்களில் இவரும் ஒருவர். இவரை ரசிகர்கள. அனைவரும் சீயான் என்று தான் அழைப்பார்கள். இவர் 1990 ஆம் ஆண்டு வெளியான என் காதல் கண்மணி என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார். இவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் என்று சொன்னால் அது சேதுதான். இந்த படத்தில் இவர் சீயான் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதுவே அவருடைய பட்டப்பெயரும் ஆகிப் போனது. அவரை அவரது ரசிகர்கள் செல்லமாக சீயான் என்றே அழைப்பார்கள். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

யாரும் பயப்புடாதீங்க, நிஜமாவே நான் தான்..ட்விட்டரில் என்ட்ரி கொடுத்து சீயான் வெளியிட்ட வீடியோ 1

அன்று தொடங்கி இன்று வரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் சீயான். அவர் தற்போது நடித்து வரும் கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன. இந்த நிலையில் விக்ரம் சமூக வலைத்தளமான ட்விட்டரில் நேற்று இணைந்தார். இவரை ட்விட்டர் உறுதி செய்து நீல வண்ண டிக் கொடுத்துள்ள நிலையில், அவரை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை மளமளவென அதிகரித்தது. நேற்று ஒரே நாளில் அவரை 85 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பின் தொடர ஆரம்பித்தனர். சமூக வலைத்தளமான ட்விட்டரை பெரும்பாலும் நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பு நிறுவனங்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் ஆகியோரே பயன்படுத்தி வருகின்றனர். தங்களின் படத்தைப் பற்றிய அப்டேட்டுகள், படங்களை பற்றிய புகைப்படங்கள், தங்களைப் பற்றிய பதிவுகள் ஆகியவற்றை தொடர்ந்து பதிவு செய்கிறார்கள். பலரது படங்களின் ட்ரைலரும் முதன் முதலில் வெளியாகுவது twitter-ல்தான். படம் குறித்த அனைத்து பணிகளுக்கும் ட்விட்டர் கணக்குகள் பெரிதும் உதவுகின்றன.

தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களும் ட்விட்டரை பயன்படுத்தி வருகின்றனர். ரஜினிகாந்த், கமல், சூர்யா, சிம்பு உள்ளிட்ட பலர் டிவிட்டரில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்கள் ஆவர். அஜித் எந்தவித சமூக வலைத்தளங்களிலும் பயன்படுத்தவில்லை. இந்த நிலையில் நடிகர் விக்ரம் விக்ரம் instagramல் மட்டுமே கணக்கு வைத்திருந்த நிலையில் தற்போது ட்விட்டர் கணக்கு ஒன்றை அவர் தொடங்கியுள்ளார். அவரது ரசிகர்கள் அவரை செல்லமாக அழைக்கும் சீயான் என்ற பெயரிலேயே தனது கணக்கை திறந்து உள்ளார். இந்த தகவலை அறிந்து பலரும் இது உண்மையான ஐடி-யா? என்று அவரை கேட்க, அவர் ஒரு வீடியோ வெளியிட்டு நான் தான் இந்த அக்கவுண்ட்டை ஓப்பன் செய்திருக்கிறேன் என்று விளக்கம் அளித்துள்ளார் .அவரது அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண…Watch the below video…

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்