Categories: அரசியல்

மாணவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் அரசை தேர்ந்தெடுங்கள்! பிரியங்கா காந்தி கோரிக்கை!!

வெளியிட்டது
மாணவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் அரசை தேர்ந்தெடுங்கள்! பிரியங்கா காந்தி கோரிக்கை!! 1

மாணவர்கள் நலனை கருத்தில் கொள்ளும் அரசை தேர்ந்தெடுங்கள்’அதாவது மாணவர்களை பாதுகாக்கும் அரசை தேர்ந்தெடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் வாக்காளர்களுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவைக்கான 5வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜ, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் அங்கு தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நேற்று பாகூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், தேசிய குடிமக்கள் பதிவு நடவடிக்கை அசாமில் தோல்வியடைந்துள்ளது. இதையடுத்து, மத்திய அரசு தற்போது குடியுரிமை சட்ட திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. 

இது மாணவர்களிடம் கடும் கோபத்தை உண்டாக்கி உள்ளது. இந்த சட்டத்தை எதிர்த்து வீதிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் மீது போலீசாரின் தாக்குதல் நடத்தி வருகின்றனர். எனவே, மாணவர்களை பாதுகாக்கும் அரசை வாக்களித்து தேர்வு செய்யுங்கள்.

மேலும் விவசாய கடன் தள்ளுபடி, பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குதல், உங்கள் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்ைத பாதுகாக்கும் அரசுக்கு வாக்களியுங்கள். ஜார்க்கண்ட் அரசு நிலத்துக்கு என தனி வங்கியை உருவாக்கி அதை உங்களிடம் இருந்து பெற்று பணக்காரர்களுக்கு வழங்குகிறது. ஆனால், காங்கிரஸ் உங்கள் கலாச்சாரத்தை பாதுகாத்து வந்துள்ளது என்றார்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்