தமிழ் சினிமாவில் கிங் என்ற இடத்தில் அமர்ந்து இருப்பவர் தளபதி விஜய். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் இருக்கிறது. மிகப்பெரிய வசூல் ஓப்பனிங்கை கொண்ட நடிகர் விஜய் , கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார். ஒப்பந்தமாகி இருக்கும் படங்களை முடித்துவிட்டு அவர் சினிமாவை விட்டு வெளியேற உள்ளார்.

இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்த கோட் படம் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. வசூலிலும் சக்கை போடு போட்டு வருகிறது. நான்கு நாட்கள் முடிவிலேயே இப்படம் சுமார் 288 கோடி வசூலை பெற்று சாதனை படைத்து இருக்கிறது. தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து இருந்தார்.
இப்படம் வெளியாகி ஓராண்டுகள் ஆகிய நிலையில், இதனை கொண்டாடும் விதமாக லியோ படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு உள்ளது படக்குழு. இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது.
Embed Video Credits ; SONY MUSIC SOUTH