Categories: சினிமா

காபி கசந்து விட்டதா? காபி வித் காதல் படத்தின் முழு திரைவிமர்சனம்.! Tamilglitz Rating – (?/5)

வெளியிட்டது

சுந்தர் சி இயக்கிய காபி வித் காதல் படம் இன்று தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மூன்று ஹீரோக்களும், ஐஸ்வர்யா தத்தா, அமிர்தா ஐயர், ரைசா வில்சன் போன்ற மூன்று ஹீரோயின்களும் இருக்கின்றனர். மேலும் பிக்பாஸ் புகழ் சம்யுக்தா, மறைந்த பிரதாப் போத்தன், விஜய் டிவி தொகுப்பாளினி டிடி, யோகி பாபு, ரெட்டிங் கிங்ஸ்லி போன்ற பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தை குஷ்பூவின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இருக்கின்றனர். சுந்தர் சி படங்கள் என்றாலே எப்போதும் கலகலப்பாக இருக்கும். காபி வித் காதல் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து தற்போது விமர்சங்களை பார்க்கலாம்.!

காபி கசந்து விட்டதா? காபி வித் காதல் படத்தின் முழு திரைவிமர்சனம்.! Tamilglitz Rating - (?/5) 1

ஜெய் ஜீவா ஸ்ரீகாந்த் ஆகிய மூன்று பேரும் அண்ணன் தம்பிகள். இவர்கள் மூவருக்கும் சகோதரியாக இருக்கிறார் டிடி. ஜெய்-அமிர்தா ஐயர் இருவரும் சிறுவயதில் இருந்தே நண்பர்கள். ஸ்ரீகாந்துக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர். ஜீவா ஐஸ்வர்யா தத்தாவுடன் லிவிங் டு கெதரில் இருக்கிறார். ஒரு கட்டத்தில் ஜீவா மற்றும் ஐஸ்வர்யா தத்தாவுக்கும் பிரேக் அப் ஆகி விடுகிறது. அந்த சோகத்திலேயே நாட்களை கடத்தி வருகிறார் ஜீவா. ஸ்ரீகாந்துக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் அவருக்கு அவரது மனைவி மீதான ஆசை குறைகிறது. இதனால் அவருக்கு மற்ற பெண்கள் மீது ஆசை வருகிறது. ஜெய் சிறு வயது தோழியை காதலித்து வருகிறார். ஆனால் அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடக்க இருக்கிறது.

அந்த பெண்ணின் மனதை மாற்றி திருமணம் செய்ய ஜெய் திட்டமிடுகிறார். ஆனால் அந்த திட்டம் நிறைவேறாததால் தொழிலதிபர் மகள் ஒருவரை திருமணம் செய்ய திட்டமிடுகிறார். ஆனால் துரதிஷ்டவசமாக அந்த பெண்ணை ஜீவாவுக்கு திருமணம் செய்ய அவரது குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர். இந்த திருமணத்தை நிறுத்த சதி செய்கிறார் ஸ்ரீகாந்த். இப்படி பல குழப்பங்களுக்கு நடுவே ஜீவா திருமணம் நடைபெற்றதா? ஜெய் தனது சிறு வயது தோழியை திருமணம் செய்தாரா? ஸ்ரீகாந்த் ஏன் திருமணத்தை நிறுத்த சதி செய்தார் என்பது பற்றிய படத்தின் மீதி கதை தான் காபி வித் காதல்.

படத்தின் பாசிட்டிவ் விஷயங்கள்:
1. நடித்த நடிகர்கள் அனைவர்க்கும் சரிசமான பங்கு கொடுத்தது.
2. டிடி கதாபாத்திரம் மிக அருமையாக வந்துள்ளது. இப்படி ஒரு சிஸ்டர் நமக்கு இல்லையே என்று ஏங்க வைக்கும் விதமாக டிடி கதாபாத்திரம் அமைந்து உள்ளது.
3. விறுவிறுப்பாக சென்ற முதல் பாதி.

படத்தின் பாசிட்டிவ் விஷயங்கள்:
1.. குழப்பமான கதைக்களம். ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் என்று சொல்லி மக்களை குழப்பிவிட்டனர்.
2. யுவன் இசை சுத்தமாக ஒர்க் அவுட் ஆகவில்லை.
3. யோகிபாபு கிங்ஸ்லி காமெடி பல இடங்களில் எடுபடவில்லை. மொத்தத்தில் காபி குடிக்க சென்றவர்களுக்கு இடியாப்ப சிக்கலே கிடைத்துள்ளது.! காபி வித் காதல் படத்திற்கு தமிழ்க்ளிட்ஸ் வழங்கும் ரேட்டிங் – 2.0/5

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்