சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி இருந்த படம்தான் காபி வித் காதல். சுந்தர்.சி, ஜீவா, ஜெய் கூட்டணியில் உருவான கலகலப்பு 2 படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன் பிறகு மூவரும் இணைந்து நடித்துள்ள படம்தான் காபி வித் காதல். இந்த படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தது. இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இந்த படத்தில் இருந்து ரம் பம் பம் பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்த நிலையில் தற்போது அந்த பாடலின் முழு வீடியோ சாங்கை படக்குழு வெளியிட்டுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை சுந்தர் சியின் மனைவியும், நடிகையுமான குஷ்பூ தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான அவனி சினிமேக்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஸ்ரீகாந்த்-ம் கதாநாயகனாக இணைந்துள்ளார். மேலும் படத்தில் ஐஸ்வர்யா தத்தா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் போன்ற மூன்று கதாநாயகிகள் நடித்து வருகின்றனர். இவர்கள் மட்டுமில்லாமல் யோகி பாபு, கிங்க்ஸ்லி, டிடி போன்ற பலரும் நடித்து இருந்தனர். இதனால் படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால் படம் எதிர்பார்த்த அவ்வளவு வெற்றியை தரவில்லை.
என்ற போதும் படத்தின் ரம் பம் பம் பாடல் மிக பெரிய வெற்றி பெற்றது. பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்த நிலையில் தற்போது அந்த பாடலின் முழு வீடியோ சாங்கை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video..
Youtube Video Code Embed Credits: U1 Records