கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஒரு சீரியலை திடீரென முடித்து எந்த கார்டு போட்டு இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பான ஒரு நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் ரேஷ்மா. பின்னர் அதே தொலைக்காட்சியில் அவருக்கு ஒரு நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பூவே பூச்சூடவா என்னும் சீரியலில் அவர் நடித்து வந்தார். இந்த நாடகத்தின் மூலமாக அவர் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். இந்த சீரியலில் கதாநாயகனின் தம்பியாக நடித்து வந்தவர் மதன். இவர் ஏற்கனவே விஜய் டிவியில் பணியாற்றியவர். கனா காணும் காலங்கள் என்னும் சீரியலின் மூலமாக அறிமுகமாகி, ஜோடி நம்பர் ஒன் போன்ற நடன நிகழ்ச்சிகளிலும் பணியாற்றி இருக்கிறார். பின்னர் விஜய் டிவியில் சில காலம் பணியாற்றி வந்த அவர், சிறிது காலம் எந்த தொலைக்காட்சிகளிலும் தோன்றாமல் இருந்து வந்தார்.

பின்னர் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வந்தார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் அவருக்கு கலர்ஸ் தொலைக்காட்சியில் பூவே பூச்சூடவா நாடகத்தில் கதாநாயகனுக்கு தம்பியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அதன் நாயகிக்கும் மதனுக்கும் காதல் மலர்ந்தது. ஆரம்பத்தில் இருவரும் காதலை வெளிப்படையாக சொல்லாமல் இருந்து வந்த போதிலும், பின்னர் இந்த தகவலை ஒத்துக் கொண்டனர். இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் ஜோடியாக கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பான அபி டெய்லர் என்னும் நிகழ்ச்சியில் நடிக்க ஒப்பந்தம் ஆகினர். தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி இந்த மாதம் கடைசி உடன் இந்த சீரியல் முடிய உள்ளதாக தெரிகிறது. விறுவிறுப்பாக போய்க்கொண்டிருந்த சீரியல் திடீரென முடிக்கப்பட உள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதற்கு முக்கிய காரணம் இரவு 7:30 மணிக்கு ப்ரைம் டைமில் இந்த சீரியல் ஒளிபரப்பப்பட்டு வந்தது. ஆனால் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பச்சைக்கிளி சீரியலுக்காக அபி டைலர் சீரியல் நேரம் மாற்றப்பட்டது. இதனால் இதன் டிஆர்பி வெகுவாக அடி வாங்கியது. இதனால் நாடகத்தை தொடரும் எண்ணம் இல்லை என்றும், துவங்கிய சில மாதங்களிலேயே நாடகத்தை முடிக்க வேண்டிய சூழ்நிலைக்கு வந்து விட்டதால் இந்த நாடகத்தை முடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனால் மதன் – ரேஷ்மா ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.