பிக் பாஸ் நிகழ்ச்சி 8வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டு கலக்கி வருகின்றனர். இதுவரை இந்த 18 பேரில் இருந்து ரவீந்தர் மற்றும் அர்னவ் வெளியேறி உள்ளனர். தற்போது நிகழ்ச்சி சூடுபிடிக்க தொடங்கி நடந்து வருகிறது. இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். 7சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசனுக்கு படப்பிடிப்புகள் இருப்பதால் அவர் தற்போது விலகி உள்ளார்.

இந்த சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் தான் தர்ஷா குப்தா. இவர் மூன்றாவது வாரம் எலிமினேட் ஆகி வெளியே சென்றுள்ளார். இவருக்கு குக் வித் கோமாளியில் கிடைத்த ஆதரவு, பிக் பாஸ் வீட்டிலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இவர் குறைவான வாக்குகளை வாங்கி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். தற்போது வெளியேறிய அவர் பேட்டி ஒன்றில் கூறி இருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தர்ஷா, பேட்டி ஒன்றில், விஜய் சேதுபதி யாரையும் பேச விடுவதில்லை எனவும், அவர் அனைவரையும் அசிங்கப்படுத்துவதால் பேசவே பயமாக இருப்பதாக கருத்து தெரிவித்து உள்ளார். இவரின் இந்த கருத்து மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.